2026 FIFA கால்பந்து உலகக் கோப்பைக்கான குரூப் அட்டவணை வெளியீடு!
கால்பந்து ரசிகர்களின் கொண்டாட்டத்துக்கான 2026-ஆம் ஆண்டு ஃபிஃபா (FIFA) உலகக் கோப்பைப் போட்டிகளுக்கான குரூப் பிரிவுகள் (அட்டவணை) தற்போது அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.

இந்தப் போட்டி அடுத்த ஆண்டு (2026) ஜூன் 11-ஆம் தேதி முதல் ஜூலை 19-ஆம் தேதி வரை கனடா, மெக்சிகோ, அமெரிக்கா ஆகிய மூன்று நாடுகளில் நடைபெற உள்ளது.

இந்த உலகக் கோப்பைப் போட்டியில் மொத்தம் 48 நாடுகள் பங்கேற்கின்றன. இது 2022-ஆம் ஆண்டு போட்டியை விட 16 அணிகள் கூடுதலாகும். உலகக் கோப்பைப் பிரிவுகள் பிரிக்கப்பட்டு அட்டவணை வெளியிடப்பட்டுள்ள நிலையில், கால்பந்து ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வந்த தகவல்களும் இதில் இடம் பெற்றுள்ளன.

உலகப் புகழ்பெற்ற வீரர் மெஸ்ஸியின் அர்ஜெண்டினா அணி குரூப் J-யில் இடம் பெற்றுள்ளது. அதே போல், நட்சத்திர வீரர் ரொனால்டோவின் போர்ச்சுகல் அணி குரூப் K-யில் இடம் பெற்றுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
