மே 29ம் தேதி விண்ணில் பாய்கிறது ஜிஎஸ்எல்வி ராக்கெட்!!

 
செயற்கைக் கோள்

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் இஸ்ரோ. தற்போது ஜி.எஸ்.எல்.வி மார்க் 2 ராக்கெட் மூலம் என்.வி.எஸ்-1 என வழிகாட்டு செயற்கைக்கோளை, மே29ம் தேதி விண்ணுக்கு அனுப்ப உள்ளது.  ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து மே 29ம் தேதி காலை 11.15 மணிக்கு விண்ணில் செலுத்தப்பட உள்ளது. நடப்பாண்டில் இஸ்ரோ ஏவும் 3வது செயற்கைக்கோள் இது என்பது குறிப்பிடத்தக்கது.  இஸ்ரோ சூரியனை ஆய்வு செய்வதற்காக வடிவமைத்து உள்ள ஆதித்யா-எல்-1 யை நடப்பாண்டு 3வது காலாண்டிலும் மற்றும் மனிதனை விண்ணுக்கு அழைத்து செல்லும் ககன்யான் ராக்கெட்டுக்கான 2 சோதனை ராக்கெட்டுகளில் ஒன்று இந்த ஆண்டு பிற்பகுதியிலும்  விண்ணில் ஏவ திட்டமிடப்பட்டு உள்ளது.

இஸ்ரோ

ககன்யான் விண்வெளி வீரர்களின் பயிற்சி முதல் தொழில்நுட்ப மேம்பாடு வரை,  2025ம் ஆண்டிற்கான மனிதனை விண்ணுக்கு அனுப்பும் முயற்சியில் இஸ்ரோ முன்னேறி வருவதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். IRNSS-1G என்பது IRNSS விண்வெளிப் பிரிவில் உள்ள ஏழு செயற்கைக்கோள்களில் ஏழாவது வழிசெலுத்தும் செயற்கைகோள்.. அதன் முன்னோடிகளான-IRNSS-1A, 1B, 1C, 1D, 1E மற்றும் 1F- PSLV-C22, PSLV-C24, PSLV-C26, PSLV-C27, PSLV-C31 மற்றும் PSLV-C32 ஆகியவை ஜூலை 2013, ஏப்ரல் 2014 ல் ஏவப்பட்டது.

இஸ்ரோ

இது, தேசத்தின் நிலைப்படுத்தல், வழிசெலுத்தல் மற்றும் நேரத் தேவைகளைப் பூர்த்தி செய்ய, இஸ்ரோ, நேவிகேஷன் வித் இந்தியன் கான்ஸ்டலேஷன் (நேவிக்) எனப்படும் பிராந்திய வழிசெலுத்தல் செயற்கைக்கோள் அமைப்பை நிறுவியுள்ளது. என்விஎஸ்-01 செயற்கைக்கோள் 2016-ல் ஏவப்பட்ட ஐஆர்என்எஸ்எஸ்-1ஜி செயற்கைக்கோளுக்குப் பதிலாக 12 ஆண்டுகள் ஆயுளைக் கொண்டுள்ளது. விண்மீன் தொகுப்பில் இன்னும் செயல்படும் செயற்கைக்கோள்களில் 2014-ல் ஏவப்பட்ட ஐஆர்என்எஸ்எஸ்-1பி 10 வருட பணி ஆயுட்காலம் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது. 

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!


From around the web