தமிழகம் முழுவதும் காவலர்களுக்கு அதிரடி உத்தரவு... கறார் காட்டிய புதிய டிஜிபி!

 
சங்கர் ஜிவால்

தமிழகத்தின் முன்னாள்  டிஜிபி சைலேந்திரபாபு ஜூன் 30ம் தேதி ஓய்வு பெற்ற பிறகு அவருக்கு பதிலாக புதிய டிஜிபியாக சங்கர் ஜிவால்  நியமனம் செய்யப்பட்டார். அவர் பதவியேற்ற பிறகு அதிரடியாக பல உத்தரவுகளை பிறப்பித்துள்ளார். அதன்படி   தமிழகம் முழுவதும் உள்ள காவல் கமிஷனர்கள், மண்டல ஐஜிக்கள், சரக டிஐஜி களுக்கு, எஸ்பிகளுக்கு சில உத்தரவுகளை பிறப்பித்துள்ளார்.

அதன்படி இன்ஸ்பெக்டர்கள் ஒரு நாள் விட்டு ஒரு நாள் இரவு பணிகளை கவனிக்க வேண்டும். ரவுடி பட்டியலில் உள்ளவர்கள் ஜாமினில் வெளியே வந்தால் அவர்களை கண்காணிக்க வேண்டும். 

30-வது டி.ஜி.பி.யாக இன்று சைலேந்திரபாபு பதவி ஏற்றுக்கொண்டார்

  • உதவி கமிஷனர்கள்   நள்ளிரவு 2 மணி வரை பணிபுரிய வேண்டும்.  
  • பகல் , இரவு  2 நேரங்களிலும்  கண்டிப்பாக வாகன ரோந்து நடத்த வேண்டும். 
  • சந்தேகத்துக்கு இடமானவர்கள், குற்றப் பட்டியலில் உள்ளவர்களை கைது செய்ய வேண்டும். 
  • குடிபோதையில் வாகனம் ஓட்டினால் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும். 
  • லாட்ஜ், ஹோட்டல்களில் சரியான சோதனை நடத்தவேண்டும். 

சங்கர் ஜிவால்

  • தங்கியிருப்பவர்கள்  சரியான முகவரியை கொடுத்தார்களா என்பதை ஆய்வு செய்ய வேண்டும். 
  • டாஸ்மாக் கடைகள் காலை 12 மணிக்கு முன்னாலும், இரவு 10 மணிக்கு மேலும்  மூடி இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.  
  • மீறினால் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்
  • அதே நேரத்தில்   பொதுமக்கள் மற்றும் காவலர்களின் குறை தீர்க்கும் வகையிலான மனுக்கள்  திங்கள் முதல் வெள்ளி வரை காலை 11.30 மணிக்கு   நேரில் பெறப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.  

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

பொலிவான பிரகாசிக்கும் சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்