செக் பண்ணிக்கோங்க!! ரூ2000 நோட்டுக்களை மாற்ற வழிகாட்டி நெறிமுறைகள் வெளியீடு!!

 
ரூ2000

இந்தியாவில் 2016 டிசம்பரில் பணமதிப்பிழப்பு நடவடிக்கையாக அப்போதைய ரூ500 , 1000 ரூ நோட்டுக்கள் செல்லாது என அறிவிக்கப்பட்டன. அந்த சமயத்தில் புதிதாக ரூ.2000 நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டன. தற்போது மே 19ம் தேதி ரிசர்வ் வங்கி ரூ2000 நோட்டுக்கள் செல்லாது என அறிவித்துள்ளது. ரூபாய் நோட்டுக்களை வங்கியில் மாற்றிக்கொள்ள செப்டம்பர் 30ம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. தினமும் 5 நோட்டுக்கள் அதாவது ரூ10000 வரை மட்டுமே மாற்றி கொள்ள முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து ரூ.2000 நோட்டுகளை மாற்ற மக்கள் வங்கிகளுக்கு படையெடுத்து வருகின்றனர்.  

2000 money rupees

அதே நேரத்தில் டாஸ்மாக் கடைகள், பெட்ரோல் பங்குகள், மளிகைக் கடைகளில் ரூ500 நோட்டுக்கள் செல்லாது என கூறிவருகின்றனர். இதனையடுத்து மக்கள் கதிகலங்கியுள்ளனர். இது குறித்து மக்கள் அவசரப்பட தேவையில்லை. மக்கள் யாரும்தற்போது ரூ.2000 நோட்டுகளை மாற்றுவதற்கு  அவசரப்பட வேண்டாம் எனக் கூறி இது குறித்த வழிகாட்டு நெறிமுறைகளை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது.   ஆர்பிஐ கவர்னர் சக்திகாந்த தாஸ்,  2000 ரூபாய் நோட்டுகளை மாற்ற  மக்களுக்கு போதிய வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் என வங்கிகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ரூ2000

கோடைக்காலம் என்பதால்  பொதுமக்கள் காத்திருக்க நிழலான இடம் அமைக்கப்பட்டிருக்க  வேண்டும், வாடிக்கையாளர்களுக்கு குடிநீர்  வசதிகள் செய்துதரப்பட வேண்டும்  என அறிவுறுத்தினார்.  மேலும், நாள் ஒன்றுக்கு எத்தனை ரூபாய் நோட்டுகள் மாற்றபடுகிறது என்பது குறித்து ஆர்.பி.ஐக்கு உடனடி தகவல்களை தெரியப்படுத்த வேண்டும். வெளிநாட்டில் உள்ள இந்தியர்கள் தங்களது  ரூபாய் நோட்டுகளை மாற்ற உரிய ஏற்பாடுகள் செய்யப்படும் எனவும் கூறியுள்ளார். ரூ2000நோட்டுகளை  மாற்றும் பணி நாளை  மே 23 செவ்வாய்க்கிழமை  முதல் தொடரும். இந்நிலையில்,  மக்கள் நோட்டுகளை மாற்ற அவசரப்பட வேண்டாம் என வேண்டுகோள் விடுத்துள்ளார். செப்டம்பர் இறுதிவரை ரூ.2000 நோட்டுகள் புழக்கத்தில் இருக்கும் எனவும் , 4 மாத காலம் அவகாசம் இருப்பதாகவும் ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார். 

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web