ஐபிஎல் தொடரில் இருந்து வில்லியம்சன் விலகல்... ரசிகர்கள் அதிர்ச்சி.. குஜராத்துக்கு பின்னடைவு!

 
வில்லியம்சன்

நடப்பு ஆண்டு ஐபிஎல் சீசன் நேற்றுமுன்தினம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த சீசனின் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதின. அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் சென்னை அணி முதலில் பேட்டிங் செய்தது.

அப்போது சென்னை அணி வீரர் ருதுராஜ் கெய்க்வாட் பந்தை சிக்சருக்கு அடிதபோது, அதனை எல்லைக்கோட்டிற்கு அருகே நின்றுகொண்டிருந்த வில்லியம்சன் பாய்ந்துசென்று கேட்ச் பிடிக்க முயன்றார். 

வில்லியம்சன்

பந்து பவுண்டரி லைனை தாண்டி சென்றதால், லாவகமாக பிடித்து அதனை எல்லைக்கோட்டிற்கு உள்ளே போட்டார். அப்போது அவர் அந்தரத்தில் இருந்து காலை ஊன்றியபோது, வலதுகாலை மட்டும் ஊன்றியதால் காயமடைந்தார். இதனால் அதே இடத்திலேயே அவர் சுருண்டு விழுந்தார். அவரது காலில் காயம் ஏற்பட்டது. அவரால் எழுந்து நிற்க கூட முடியாமல் வலியில் துடித்தார். இதன் காரணமாக பவுண்டரி லைனின் அருகே வந்த அணியின் மருத்துவ உதவியாளர்கள் அவரை சோதித்த பிறகு அவரால் நடக்க முடியவில்லை என்று தெரிந்ததும் தூக்கிய படி மைதானத்தில் இருந்து வெளியே அழைத்துச் சென்றனர். 

பின்னர் அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் சில முடிவுகள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்த வகையில் வில்லியம்சன் காலில் ஏற்பட்டுள்ள காயம் குணமடைய சில வாரங்கள் தேவைப்படும் என்பதனால் அவர் ஐபிஎல் தொடரிலிருந்து விலக உள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

வில்லியம்சன்

இதுகுறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை என்றாலும் நம்ப தகுந்த வட்டாரங்களில் பேசப்படும் விடயமாக வில்லியம்சன் ஐபிஎல் தொடரில் இருந்து விலகுவது உறுதி ஆகியுள்ளது. கடந்த ஆண்டு சன்ரைசர்ஸ் அணியிலிருந்து வெளியேற்றப்பட்ட அவர் இந்த ஆண்டு குஜராத் அணிக்காக அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் முதல் போட்டியிலேயே அவர் காயத்தை சந்தித்து வெளியேற இருப்பது ரசிகர்கள் மத்தியில் ஏமாற்றத்தை அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த போட்டியின் முடிவில் குஜராத்  அணி அபார வெற்றி பெற்றது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web