மாஸ் வீடியோ... சிறிய ரக விமானத்தை இயக்கி குஜராத் டைட்டன்ஸ் வீரர்... வைரலாகும் இன்ஸ்டா பதிவு!
நியூசிலாந்து அணியின் அதிரடி பேட்டர், சுழற்பந்து வீச்சாளர் மற்றும் மின்னல் வேக ஃபீல்டர் என ‘சூப்பர் மேன்’ போலச் செயல்படும் க்ளென் ஃபிலிப்ஸ், தற்போது ஆகாயத்திலும் தனது திறமையை நிரூபித்துள்ளார். ஆக்லாந்தில் உள்ள ஆர்ட்மோர் விமானப் பயிற்சி பள்ளியில், சிறிய ரக விமானம் ஒன்றை வெற்றிகரமாக இயக்கி, அதனைத் தரையிறக்கி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார். மார்ச் 17 அன்று நடைபெற்ற இந்தப் பயிற்சிக்குப் பிறகு, இது குறித்த வீடியோவை அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர, அது தற்போது கிரிக்கெட் ரசிகர்களிடையே காட்டுத்தீயாய் பரவி வருகிறது.
ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக விளையாடி வரும் ஃபிலிப்ஸ், சிறு வயது முதலே பறப்பதில் மிகுந்த ஆர்வம் கொண்டவர். இது குறித்து அவர் பேசுகையில், "என்னிடத்தில் போதிய வசதி இருந்தாலோ அல்லது கிரிக்கெட் வாழ்க்கையைத் தேர்வு செய்யாமல் இருந்தாலோ, நான் ஒரு விமானியாகவே மாறியிருப்பேன். கிரிக்கெட்டைத் தவிர்த்து எனக்கு ஒரு வேலை வேண்டுமென்றால், அது நிச்சயமாக விமானம் ஓட்டுவதாகத்தான் இருக்கும்" என்று தனது நீண்ட கால ஆசையை வெளிப்படுத்தியுள்ளார்.
மைதானத்தில் பவுண்டரி எல்லைகளில் பறந்து பறந்து கேட்ச் பிடிப்பதில் வல்லவரான ஃபிலிப்ஸ், இப்போது நிஜமாகவே வானில் பறந்து சாதனை படைத்துள்ளது அவரது பன்முகத்தன்மையை உலகிற்குப் பறைசாற்றியுள்ளது. மலையகப் பகுதிகளில் இயற்கையோடு இணைந்து நேரத்தைச் செலவிட விரும்பும் இவர், ஓய்வு நேரங்களில் இது போன்ற சாகசங்களில் ஈடுபடுவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளார். இவரது இந்தத் துணிச்சலான முயற்சியைப் பார்த்த சக கிரிக்கெட் வீரர்களும், ரசிகர்களும் சமூக வலைதளங்களில் பாராட்டுக்களைக் குவித்து வருகின்றனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
