யோகா மையத்தில் கள்ளநோட்டு 'பேக்டரி'! குருஜி பிரதீப்பின் பகீர் பின்னணி ... ரூ.2.9 கோடி சிக்கியது எப்படி?

 
குஜராத் குஜராத்

குஜராத் மாநிலம் சூரத்தில் யோகா மையம் என்ற பெயரில் ரகசியமாகக் கள்ளநோட்டுகளை அச்சடித்து வந்த 'யோகா குரு' பிரதீப் உள்ளிட்ட 6 பேர் கொண்ட கும்பலை போலீசார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். சூரத்தில் உள்ள சத்யம் யோகா மையத்தில் அச்சடிக்கப்பட்ட சுமார் 2.9 கோடி ரூபாய் மதிப்பிலான கள்ளநோட்டுகள், அகமதாபாத்திற்குப் கடத்த முயன்றபோது பறிமுதல் செய்யப்பட்டன. அம்ரேவாடி பகுதியில் போலீசார் நடத்திய அதிரடி வாகன சோதனையில், 2 கோடி ரூபாய் கள்ளநோட்டுகளுடன் சிக்கிய இந்தக் கும்பலிடம் நடத்திய விசாரணையில், நாடு முழுவதும் கள்ளநோட்டுகளைப் புழக்கத்தில் விட அவர்கள் போட்ட மாஸ்டர் பிளான் அம்பலமானது.

கைது செய்யப்பட்டுள்ள யோகா குரு பிரதீப், தனது கூட்டாளிகளுடன் இணைந்து ஒரு வினோதமான தொழிலைச் செய்து வந்துள்ளார். அதாவது, யாராவது ஒரு உண்மையான 500 ரூபாய் நோட்டைக் கொடுத்தால், அவர்களுக்கு 1,500 ரூபாய் மதிப்பிலான கள்ளநோட்டுகளைக் கொடுத்துத் தனது முகவர் வலையை விரிவுபடுத்தியுள்ளார். சூரத் யோகா மையத்தில் சோதனை நடத்திய போலீசார், அங்கிருந்து கள்ளநோட்டு அச்சடிக்கப் பயன்படுத்தப்பட்ட நவீன இயந்திரங்கள் மற்றும் காகிதங்களைப் பறிமுதல் செய்துள்ளனர். ஆன்மீகப் போர்வையில் கோடிக்கணக்கில் கள்ளநோட்டுகளைப் புழக்கத்தில் விட்ட இந்தச் சம்பவம் குஜராத் மாநிலத்தையே அதிர வைத்துள்ளது.

தற்போது கைதாகியுள்ள பிரதீப், ஏற்கனவே 2018-ஆம் ஆண்டே பெரும் சர்ச்சையில் சிக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. அப்போது தனது ஆசிரமத்திற்குச் சீடர்கள் கொடுத்த பணத்தைத் திருப்பித் தர முடியாமல், 10 சீடர்களின் பெயர்களை எழுதி வைத்துவிட்டுத் தற்கொலைக்கு முயன்ற நாடகத்தையும் அவர் அரங்கேற்றியிருந்தார். பழைய பண விவகாரங்களில் சிக்கியவர், இப்போது குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்கக் கள்ளநோட்டு அச்சடிக்கும் பாதையைத் தேர்ந்தெடுத்துள்ளார். ஒரு பெண் உள்ளிட்ட 6 பேரையும் கைது செய்துள்ள போலீசார், இவர்களுக்குப் பின்னால் இருக்கும் சர்வதேசத் தொடர்புகள் குறித்தும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!