வளைகுடா நாடுகளை போர்க்களமாக்க யார் அனுமதி கொடுத்தது?

 
வளைகுடா வளைகுடா

ஐக்கிய அரபு அமீரகத்தைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் கலாப் அல் ஹப்தூர், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்க்கு திறந்த கடிதம் எழுதி கடுமையான கேள்விகளை எழுப்பியுள்ளார். “ஈரான் போரில் வளைகுடா நாடுகளை இழுத்தது யார்? எங்கள் பகுதியை போர்க்களமாக்க யார் அனுமதி அளித்தார்கள்?” என்று அவர் கேள்வி எழுப்பினார். இந்த கடிதத்தை அவர் தனது எக்ஸ் தளத்திலும் வெளியிட்டுள்ளார்.

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து பதற்றம் அதிகரித்ததாக கூறப்படுகிறது. இதற்குப் பதிலாக ஈரான் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை வளைகுடா நாடுகள் மீது மேற்கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பாதுகாப்பு மற்றும் பொருளாதார நிலைத்தன்மை பாதிக்கப்படக்கூடாது என்றும், பெரிய சக்திகள் தங்களின் மோதலை இந்த பகுதியில் நடத்தக்கூடாது என்றும் ஹப்தூர் தெரிவித்துள்ளார்.

மேலும், இந்தப் போர் அமெரிக்க மக்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று அவர் எச்சரித்துள்ளார். போருக்கான நேரடி இராணுவச் செலவு பல பில்லியன் டாலராக உயரலாம் என்றும் கூறினார். தேர்தலில் போர்களில் ஈடுபடமாட்டேன் என்ற வாக்குறுதியை டிரம்ப் மீறியதாகவும் அவர் விமர்சித்துள்ளார். மத்திய கிழக்கில் அமைதி நிலவ வேண்டும் என்பதற்காக பேச்சுவார்த்தை அவசியம் என்றும் அவர் வலியுறுத்தினார்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!