யூதர்களை குறிவைத்து துப்பாக்கிச்சூடு! பாகிஸ்தான் தந்தை - மகன் வெறிச்செயல், 15 பேர் பலி!
யூத மதத்தினரின் முக்கிய பண்டிகையான ஹனுக்கா தீபத்திருநாள் பண்டிகை நேற்று தொடங்கியது. 8 நாட்கள் நடைபெறும் இந்தப் பண்டிகையின் முதல் நாளையொட்டி, உலகம் முழுவதும் யூதர்கள் மெழுகுவர்த்தி ஏற்றி உற்சாகமாகக் கொண்டாடினர். இந்த வகையில், ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் உள்ள சிட்னி நகரில் போண்டி கடற்கரை அருகே நடைபெற்ற ஹனுக்கா பண்டிகை கொண்டாட்டத்தில் ஏராளமான யூதர்கள் பங்கேற்றிருந்தனர்.
யூதர்கள் கூடி இருந்த அந்தப் பகுதியில் திடீரென துப்பாக்கியுடன் வந்த இரண்டு பயங்கரவாதிகள் அங்கிருந்தவர்களைக் குறிவைத்து கண்மூடித்தனமாகத் தாக்குதல் நடத்தத் தொடங்கினர். இந்தத் துப்பாக்கிச்சூடு தாக்குதலில் ஏற்கனவே 10 பேர் உயிரிழந்த நிலையில், பலி எண்ணிக்கை தற்போது 15 ஆக உயர்ந்துள்ளது. மேலும், இந்த கோரச் சம்பவத்தில் 40க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், தாக்குதல் நடத்திய இருவரில் ஒருவனைச் சுட்டுக் கொன்றனர்.
இந்தத் தாக்குதலை நடத்தியது பாகிஸ்தானைச் சேர்ந்த சஜீத் அக்தர் (50) மற்றும் அவரது மகன் நவீத் அக்தர் (24) ஆகிய இரு பயங்கரவாதிகள் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. சுட்டுக் கொல்லப்பட்டவன் சஜீத் அக்தர் எனவும், படுகாயமடைந்த நவீத் அக்தர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறான் எனவும் போலீசார் தெரிவித்துள்ளனர். ஆஸ்திரேலியாவில் பழக்கடை நடத்தி வந்த சஜீத் அக்தர் இந்தத் தாக்குதலை நடத்தியதற்கான காரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
