பெரும் சோகம்.. வினையான விளையாட்டு... அக்காவை சுட்டுக் கொன்ற 3 வயது தங்கை!

அமெரிக்காவில் துப்பாக்கி கலாச்சாரம் பெருகி வருகிறது. தற்காப்புக்காக பலரும் வீட்டில் துப்பாக்கி வைத்துள்ளனர். இதனை குழந்தைகள், பள்ளிப் பிள்ளைகள் எடுத்து சென்று பல நேரங்களில் விபரீதங்கள் நிகழ்ந்துள்ளன. இருந்தபோதிலும் இந்த துப்பாக்கி கலாச்சாரத்திற்கு ஒரு முடிவை இது வரை அமெரிக்க நிர்வாகம் எடுக்கவில்லை என்பது தான் வேதனைக்குரிய விஷயம். அந்த வகையில் அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் ஹாரிஸ் கவுண்டி-யில் குழந்தைகள் வீட்டில் விளையாடி கொண்டிருந்தனர்.
அவர்கள் அங்கிருந்த செமி-ஆட்டோமேட்டிக் ரக கைத்துப்பாக்கியை எடுத்து வைத்திருந்தனர். இதனை உபயோகிக்க தெரியாமல் எதிர்பாராத விதமாக தனது 4 வயது சகோதரியை சுட்டுக் கொன்றுள்ளார் 3 வயது தங்கை. மார்ச் 12ம் தேதி ஹூஸ்டன் குடியிருப்பில் 2 குழந்தைகளுடன் கூடிய 7 பேர் கொண்ட பெரிய குடும்பம் ஒன்று வார இறுதியை கோலாகலமாக கொண்டாடிக் கொண்டிருந்தது.
அவர்களின் குழந்தைகள் அங்குள்ள வீட்டின் படுக்கையறைக்குச் சென்று பெரியவர்களின் மேற்பார்வை இல்லாமல் விளையாடி கொண்டிருந்தனர். திடீரென கேட்ட துப்பாக்கிச் சத்தத்தால் அறைக்குள் ஓடிவந்த குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர்.
அங்கு 4 வயது சிறுமி தரையில் அசைவில்லாமல் இருந்ததை கண்டனர். 3 வயது குழந்தையின் கையில் குண்டுகள் நிரப்பப்பட்ட துப்பாக்கியையும் கண்டனர். இச்சம்பவம் குறித்து அம்மாகாண காவல் ஆய்வாளர் “இந்த சம்பவம் மிகவும் வருந்தத்தக்கது. பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை அவர்களின் மேற்பார்வையில் வைத்திருக்காததே இதற்கு முழு காரணம்” எனக் கூறினார். அத்துடன் அமெரிக்காவில் துப்பாக்கி கலாச்சாரம் அதிகரித்து வருவதாகவும் வேதனையைப் பதிவு செய்துள்ளார்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க