நைஜரில் பயங்கரவாத தாக்குதல்… 31 பேர் துப்பாக்கியால் சுட்டுக் கொலை!
மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜரில் பல்வேறு பயங்கரவாத அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன. இக்குழுக்கள் அவ்வப்போது கிராம மக்கள் மற்றும் பள்ளி குழந்தைகளை கடத்தி செல்லும் சம்பவங்களில் ஈடுபட்டு வருகின்றன. இதனால் அந்நாட்டில் பாதுகாப்பு நிலை மோசமாக உள்ளது.

இந்த நிலையில் டிலபெரி மாகாணத்தில் உள்ள கொரொல் கிராமத்திற்குள் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆயுத கும்பல் புகுந்தது. அவர்கள் கிராம மக்கள் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கி சூடு நடத்தினர். இந்த தாக்குதலில் 31 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

மேலும் 4 பேர் படுகாயமடைந்தனர். தகவலறிந்து சென்ற போலீசார் காயமடைந்தவர்களை மருத்துவமனையில் அனுமதித்தனர். தாக்குதல் நடத்திவிட்டு தப்பியோடிய ஆயுத கும்பலை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
