காவலர் வாகனத்தை குறிவைத்து துப்பாக்கிச் சூடு… 5 போலீஸார் பலி!

 
pakisthan
 

பாகிஸ்தானின் கைபர் பக்துன்குவா மாகாணம் கராக் மாவட்டத்தில், காவல் துறையினர் பயணித்த வாகனத்தின் மீது மர்ம நபர்கள் திடீர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். தனியார் எரிசக்தி நிறுவனத்துக்கான பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போது இந்த தாக்குதல் நடைபெற்றது. இதில் 5 காவலர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

சிந்தூர் எல்லை இந்தியா பாகிஸ்தான் இராணுவம்

துப்பாக்கிச் சூட்டுக்குப் பிறகு, தாக்குதலாளர்கள் காவலர் வாகனத்தின் மீது தீ வைத்துவிட்டு தப்பியோடியதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த கொடூர தாக்குதலுக்கு இதுவரை எந்த பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. சம்பவம் தொடர்பாக பாதுகாப்புப் படையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

பாகிஸ்தான் ராணுவம்

பலூசிஸ்தான் மற்றும் கைபர் பக்துன்குவா பகுதிகளில் சமீப காலமாக பாதுகாப்புப் படையினரை குறிவைத்து தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன. கடந்த டிசம்பர் 3-ம் தேதி டெரா இஸ்மாயில் பகுதியில் நடந்த வெடிகுண்டு தாக்குதலில் 3 காவலர்கள் உயிரிழந்தது நினைவுகூரப்படுகிறது. தொடரும் தாக்குதல்கள் பாகிஸ்தானில் பதற்றத்தை அதிகரித்துள்ளன.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!