எங்களுக்கு விவாகரத்து கொடுங்க... ஒரே காரில் நீதிமன்றம் வந்த ஜி.வி.பிரகாஷ் – சைந்தவி!

 
ஜிவி பிரகாஷ்

 
திரைத்துறையில் தனுஷ், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், டி இமான் என விவாகரத்து பெறுபவர்கள் வரிசையில் ஜிவிபிரகாஷ் சைந்தவியும் சேர்ந்துள்ளனர்.  அவர்களை தொடர்ந்து காதலித்து திருமணம் செய்து கொண்ட இசையமைப்பாளர்  மற்றும் பாடகி சைந்தவி கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ முடிவு செய்திருப்பதாக 2024  மே மாதம் இருவரும் அறிக்கை வெளியிட்டிருந்தனர்.  


இதனை தொடர்ந்து இருவரும் பேசிக்கொள்ளாமல் இருக்கவில்லை பிரிந்தாலும் நண்பர்களாக இருப்போம் என அறிக்கையில் இருவரும் குறிப்பிட்டபடியே சேர்ந்து ஒன்றாக பாடல்கள் பாடுவது என நண்பர்களாக இருந்து வருகின்றனர்.  சமீபத்தில் இசை நிகழ்ச்சி ஒன்று நடைபெறும் போது கூட அங்கு சைந்தவி அழைக்கப்பட்டிருந்தார். ஜிவியுடன் இணைந்து பாடல்களை பாடிக்கொண்டிருந்த வீடியோக்களும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.  

சைந்தவி


இந்நிலையில்  “எங்களுக்கு விவாகரத்து வேணும்” என சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் ஜி.வி.பிரகாஷ் – சைந்தவி இருவரும் மனுதாக்கல் செய்துள்ளனர். இன்று ஒரே காரில் வந்த அவர்கள் இருவரும் நேரடியாக சென்னை குடும்ப நல நீதிமன்றத்திற்கு சென்று எங்கள் இருவருக்கும் விவாகரத்து வேண்டும் என கோரி அதற்கான மனுவை கொடுத்துவிட்டு வந்தபடி ஒரே காரில் சென்றனர். இருவரும் ஒன்றாக வந்து மனுதாக்கல் செய்த நிலையில், வழக்கின் விசாரணை ஒத்திவைக்கப்பட்டு இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

 உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?