ஜி.வி.பிரகாஷ், சைந்தவி விவாகரத்து... நீதிமன்றம் ஒத்தி வைப்பு!

 
ஜிவி பிரகாஷ் சைந்தவி


 
தமிழ் சினிமாவில் பிரபல இசையமைப்பாளராகவும் நடிகராகவும் இருந்து வருபவர்  ஜி.வி பிராகஷ் குமார். இவர்  2013 ம் ஆண்டு தனது பள்ளித் தோழியான  சைந்தவியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஜி.வி.பிரகாஷ் - சைந்தவிக்கு தம்பதியின் மகள் அன்வி.  சமீபகாலமாக இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

சைந்தவி

இருவரும் தங்களது  பிரச்சனையால் ஏற்கனவே சில காலம் தனித்தனியாக பிரிந்து வாழ்ந்து வந்தனர்.  இருவரும் பிரிவதாக அறிவித்து சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் பரஸ்பரம் விவாகரத்து கோரி  மார்ச் 24 தேதி நேரில் ஆஜராகி மனுத்தாக்கல் செய்தனர்.

ஜிவி பிரகாஷ்


இந்த வழக்கை கோப்புக்கு எடுத்த சென்னை முதலாவது கூடுதல் குடும்ப நல நீதிமன்ற நீதிபதி செல்வ சுந்தரி, பரஸ்பரம் இருவரும் விவாகரத்து கோரிய மனுவை செப்டம்பர் 25 தேதிக்கு தள்ளிவைத்தார். அன்றைய விசாரணைக்கு இருவரும் நேரில் ஆஜராக நீதிபதி உத்தரவிட்டார்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web