ஹேர் மையங்களுக்கு கடும் கட்டுப்பாடுகள்... சுகாதாரத் துறை அதிரடி !
சென்னை அண்ணா நகர் பகுதியில் செயல்பட்டு வந்த ‘மிஸ்டர் ஹேர்’ என்ற சிகை சீரமைப்பு சிகிச்சை மையத்தில் மருத்துவம் மற்றும் ஊரக நலத்துறை (டிஎம்எஸ்) அதிகாரிகள் கடந்த 10-ம் தேதி திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.அப்போது, பிளஸ் 2 மட்டுமே படித்த இருவர் ‘மருத்துவர்’ என கூறி முடி மாற்று சிகிச்சை அளித்து வந்தது கண்டறியப்பட்டது. இதுகுறித்து காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அந்த இருவரும் உட்பட மூவர் கைது செய்யப்பட்டனர்.
இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகம் முழுவதும் இதுபோன்ற சிகிச்சை மையங்களை முறைப்படுத்துவதிலும் கண்காணிப்பதிலும் நடைமுறை சிக்கல்கள் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சிலர் பதிவு செய்யாமல் மையங்களை நடத்துவதோடு, தகுதி இல்லாதவர்களும் சிகிச்சை அளித்து வருவதாகவும் கூறப்படுகிறது.
அதிகாரிகள் விளக்குகையில், மருத்துவமனை அல்லது கிளினிக் தொடங்க மருத்துவம் மற்றும் ஊரக நலத்துறையில் கட்டாயமாக பதிவு செய்து உரிமம் பெற வேண்டும். பதிவு செய்யப்பட்ட மையங்கள் தொடர் கண்காணிப்பிற்குட்படுத்தப்படும். ஆனால், பல முடி மாற்று மையங்கள் ‘அழகு நிலையம்’ என்ற பெயரில் செயல்படுவதால் அவை துறையின் கட்டுப்பாட்டிற்கு வெளியே உள்ளன.இந்நிலையை பயன்படுத்தி போலி மருத்துவர்கள் சிகிச்சை அளிப்பதால் உயிரிழப்பு அபாயம் கூட ஏற்படக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. எனவே, அங்கீகாரம் பெறாத சிகிச்சை மையங்களையும் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
