ரூ.39.20 கோடி மதிப்பில் ஹஜ் இல்லம்... இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டுகிறார்!

 
5 காவலர்களுக்கு காந்தியடிகள் காவலர் விருது.. முதல்வர் உத்தரவு!

தமிழ்நாட்டில் வாழும் இஸ்லாமியச் சகோதரர்கள் ஹஜ் புனிதப் பயணம் மேற்கொள்வதைச் சுலபமாக்கும் நோக்கில், சென்னை அண்ணா பன்னாட்டு விமான நிலையம் அருகில் ரூ.39 கோடியே 20 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள தமிழ்நாடு ஹஜ் இல்லக் கட்டிடத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று காலை 10 மணியளவில் அடிக்கல் நாட்டுகிறார். இந்தத் திட்டமானது, தி.மு.க. அரசின் 'எல்லாருக்கும் எல்லாம்' என்ற திராவிட மாடல் கொள்கையின் ஒரு பகுதியாகச் செயல்படுத்தப்படுகிறது.

தலைமை செயலகம்

இஸ்லாமியச் சமுதாய மக்கள் ஹஜ் பயணத்தைத் தங்களின் வாழ்நாள் கடமையாகக் கருதுகிறார்கள். தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஹஜ் பயணம் மேற்கொள்ளும் இஸ்லாமியர்கள், விமான நிலையம் வழியாகப் பயணம் புறப்படுவதற்கு ஒரு நாள் முன்னதாகச் சென்னை வந்து தங்கிச் செல்வதற்கு வசதியாக இந்த இல்லம் கட்டப்படவுள்ளது. இந்தத் திட்டம் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த 2.3.2025 அன்று சட்டமன்றத்தில் அறிவித்திருந்தார். சென்னை அண்ணா பன்னாட்டு விமான நிலையம் அருகில் நங்கநல்லூரில், ஒரு ஏக்கர் அரசு நிலப்பரப்பில் இந்த ஹஜ் இல்லம் அமைய உள்ளது. இந்த இல்லத்தில் நாள் ஒன்றிற்கு ஏறத்தாழ 400 ஹஜ் புனிதப் பயணிகள் தங்குவதற்கு ஏற்ற வசதிகள் ஏற்படுத்தப்பட உள்ளன.

 முதல்வர் ஸ்டாலின் 5,650 பயனாளிகளுக்கு ஹஜ் மானியம் வழங்கினார்!

இந்த அடிக்கல் நாட்டு விழாவில், தமிழக அமைச்சர்கள், சட்டமன்ற மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் திரளாகக் கலந்து கொண்டு சிறப்பித்தனர். சிறுபான்மையின மக்கள் உட்படத் தமிழ்நாட்டில் வாழும் அனைவருக்கும் சம உரிமையுடன் வாழ்வதற்குத் தேவையான உதவிகளை அரசு செய்து வருகிறது என்பதை இந்தத் திட்டம் தெளிவுபடுத்துகிறது என்று அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!