12 நாட்கள் அரையாண்டு விடுமுறை குறையாது… பள்ளிக்கல்வித்துறை உறுதி!
அரையாண்டு விடுமுறை குறைக்கப்படும் என சமூக வலைதளங்களில் பரவி வந்த தகவல்களுக்கு பள்ளிக்கல்வித்துறை முற்றுப்புள்ளி வைத்துள்ளது. இந்த ஆண்டு மாணவர்களுக்கு 12 நாட்கள் அரையாண்டு விடுமுறை வழங்கப்படும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர் அனைவரும் நிம்மதியடைந்துள்ளனர்.

தமிழகத்தில் 1ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை அரையாண்டுத் தேர்வுகள் டிசம்பர் 23ஆம் தேதியுடன் முடிவடைகின்றன. பருவமழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டதால், அரையாண்டு விடுமுறை குறைக்கப்படும் என்றும், ஜனவரி 2ஆம் தேதியே பள்ளிகள் திறக்கப்படும் என்றும் வதந்திகள் பரவின. இதனால் மாணவர்களிடையே ஏமாற்றம் ஏற்பட்டது.

இந்த நிலையில் பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட அறிவிப்பில், விடுமுறையை குறைக்கும் எந்தத் திட்டமும் இல்லை என தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. டிசம்பர் 24ஆம் தேதி முதல் ஜனவரி 4ஆம் தேதி வரை விடுமுறை வழங்கப்படும். ஜனவரி 5ஆம் தேதி பள்ளிகள் வழக்கம்போல் திறக்கப்படும். வழக்கத்தை விட 3 நாட்கள் கூடுதலாக கிடைத்துள்ள இந்த விடுமுறை, மாணவர்களுக்கு புத்துணர்ச்சி அளிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
