இன்று 10ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு! எப்படி பதிவிறக்கம் செய்வது?!

 
நீட் தேர்வு

இன்று தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இணையதளத்தில் ஹால் டிக்கெட் வெளியிடப்படுகிறது. பொதுத் தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை எப்படி பதிவிறக்கம் செய்வது என்று தெரிந்து கொள்ளுங்க. 10ம் வகுப்பு மாணவர்களுக்கான 2022-23ம் கல்வியாண்டு பொதுத் தேர்வு ஏப்ரல் 6ம் தேதி தொடங்குகிறது. இதற்காக, ஆன்லைனில் விண்ணப்பித்த தனித் தேர்வர்களுக்கான ஹால்டிக்கெட் இன்று மார்ச் 17ம் தேதி வெளியாகிறது. இது குறித்து அரசு தேர்வுகள் இயக்ககம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், 

தேர்வு மாணவி முடிவுகள் பரீட்சை

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு விண்ணப்பித்த தனித் தேர்வர்களுக்கான (தக்கல் உட்பட) ஹால்டிக்கெட் மார்ச் 17ம் தேதி www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்படும். தேர்வர்கள், விண்ணப்ப எண், நிரந்தர பதிவு எண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை பதிவு செய்து தங்களுடைய ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு

அதே போல் அறிவியல் பாட செய்முறை தேர்வுகள் வரும் 20 முதல் 24ம் தேதி வரை செய்முறை பயிற்சி வகுப்புகள் நடைபெற்ற பள்ளிகளிலேயே நடைபெறும். தேர்வு குறித்த விவரங்களை பள்ளி தலைமை ஆசிரியர்களிடம் தனித் தேர்வர்கள் கேட்டு அறிந்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web