தமிழ்நாடு அரசு உதவிப்பேராசிரியர் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு... டவுன்லோடு செய்வது எப்படி?!
ஆசிரியர் தேர்வு வாரிய அறிவிக்கை எண் 04/2025 (திகதி: 16.10.2025)ஐப்பற்றி தெரிவிக்கப்பட்டபடி, 2025 ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு அரசு கலை, அறிவியல் மற்றும் அரசு கல்வியியல் கல்லூரிகளுக்கான உதவிப்பேராசிரியர் தேர்வு 27.12.2025 அன்று காலை மற்றும் மாலை அமர்வுகளில் நடைபெற உள்ளது. இந்த தேர்வு 38 மாவட்டங்களிலும் 195 மையங்களில் நடைபெறவுள்ளது.

தேர்வு மைய விவரங்கள் தேர்வர்களின் நுழைவுச் சீட்டில் குறிப்பிடப்பட்டுள்ளன. விண்ணப்பித்த தேர்வர்கள் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளம் https://www.trb.tn.gov.in/ மூலம் 11.12.2025 முதல் தனது User ID மற்றும் Password பயன்படுத்தி நுழைவுச் சீட்டினை பதிவிறக்கம் செய்யலாம்.

நுழைவுச் சீட்டு பதிவிறக்கம் செய்ய ஏற்படும் சிக்கல்கள் அல்லது தொடர்புடைய கேள்விகளுக்கு, ஆசிரியர் தேர்வு வாரியத்தின் குறை தீர்க்கும் மையங்களை அணுகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு மைய மாற்றம் தொடர்பான கோரிக்கைகள் எந்த காரணத்தாலும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
