காசா - இஸ்ரேல் போர்.. ஹமாஸ் படையின் துணை தலைவர் கொடூரமாக சுட்டு கொலை..!!

 
 சலே அல்-அரூரி

பாலஸ்தீனத்தின் காஸா பகுதியில் செயல்பட்டு வரும் ஹமாஸ் அமைப்பு, கடந்த ஆண்டு அக்டோபர் 7ம் தேதி இஸ்ரேல் மீது பயங்கர தாக்குதலை நடத்தியது. இந்த தாக்குதலில் இஸ்ரேலில் 1,139 பேர் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. இஸ்ரேலில் இருந்து பல பணயக்கைதிகளை ஹமாஸ் கடத்திச் சென்றது. இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து காசாவில் உள்ள ஹமாஸ் மீது இஸ்ரேல் கடும் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் இரு தரப்பிலும் போருக்கு வழிவகுத்தது. இதன் விளைவாக, காஸாவில் ஆயிரக்கணக்கான மக்கள் இறந்தனர். பலர் வீடுகளை இழந்து உணவுப் பற்றாக்குறையால் அவதிப்பட்டனர்.

அன்று முதல் இன்று வரை ஹமாஸ் இருக்கும் இடங்களில் இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கிடையில், ஒப்பந்தத்தின் கீழ் காசாவில் உள்ள 100க்கும் மேற்பட்ட பணயக்கைதிகளை ஹமாஸ் விடுவித்தது. எனினும், காஸாவில் இன்னும் 129 பேர் பிணைக் கைதிகளாகத் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாக இஸ்ரேல் கூறுகிறது. இதனையடுத்து பிணைக் கைதிகளை மீட்கும் பணியில் இஸ்ரேல் ஈடுபட்டுள்ளது. இதேவேளை, இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையிலான போர் இன்று 87ஆவது நாளாக நீடிக்கிறது. 


இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையிலான போரில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 23 ஆயிரத்தை தாண்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய தாக்குதலில் 1,147 பேர் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 21,978 பேர் பலியாகினர். இதன் மூலம் இஸ்ரேல்-ஹமாஸ் போரில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 23,436 ஆக அதிகரித்துள்ளது. இருப்பினும் இரு தரப்பினரும் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் லெபனான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஹமாஸ் அமைப்பின் துணைத் தலைவர் சலே அல் அரூரி கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. லெபனானின் பெய்ரூட்டின் தெற்கு புறநகர் பகுதியில் ஹமாஸ் மீது இஸ்ரேலிய இராணுவம் ஆளில்லா வான்வழி (ட்ரோன்) தாக்குதலை நடத்தியது.

இதில் ஹமாஸின் மூத்த மற்றும் துணைத் தலைவரான சலே அல்-அரூரி உட்பட 5 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. ஹமாஸின் சக்திவாய்ந்த மூத்த தலைவரான சலே அல்-அரூரி, இஸ்ரேலிய உளவுத்துறை நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்டிருக்கலாம் என ஹமாஸ் தெரிவித்துள்ளது. முன்னதாக, போரின் போது காசாவில் ஹமாஸ் தளபதிகள் மற்றும் அதிகாரிகள் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் அறிவித்தது. ஆனால் தற்போது ஆளில்லா விமானத் தாக்குதலில் கொல்லப்பட்டவர்களில் சலே அல்-அரூரிதான் மிக உயர்ந்த நபர். லெபனானில் இரண்டாவது பாதுகாப்பு அதிகாரியான அரூரி கொல்லப்பட்டதை இஸ்ரேலிய இராணுவ செய்தித் தொடர்பாளர் டேனியல் ஹகாரி உறுதிப்படுத்தினார்.

மார்கழிக் கோலத்தில் மட்டும் பூசணிப்பூ வைப்பது ஏன்?!

மார்கழி மாதத்தில் இந்த தவற மட்டும் செய்யாதீங்க!

மார்கழி மாதத்துக்கு இத்தனை சிறப்புகளா? விரதமுறை, பலன்கள்!!

மார்கழி மாதம் ஏன் திருமணம் செய்யக்கூடாது... பிரமிக்க வைக்கும் விஞ்ஞான உண்மைகள்!

From around the web