நாளை மறுநாள் ஆனந்த வாழ்வு தரும் அனுமன் ஜெயந்தி... பூஜையில் இந்த விஷயத்தை மறக்காதீங்க!
ராம நாமம் ஒலிக்கும் இடமெல்லாம் அனுமன் நிச்சயம் இருப்பார் என்பது ஐதீகம். ராமாயணத்தில் ராமருக்கு அடுத்தபடியாக பக்தர்களால் போற்றப்படும் தெய்வம் ஆஞ்சநேயர். அஞ்சனை மைந்தன், வாயு புத்திரன், ராம தூதன், சிரஞ்சீவி என பல நாமங்களில் அழைக்கப்படும் அவர், சிவபெருமானின் ருத்ர அம்சமாகக் கருதப்படுகிறார். ராம நாமம் சொல்வோருக்கு உடனடியாக அருள்புரியும் அனுமனை வழிபட்டால் வாழ்வில் மகிழ்ச்சியும் புண்ணியமும் பெருகும் என்பது நம்பிக்கை.மார்கழி மாதம் அமாவாசையுடன் வரும் மூலம் நட்சத்திரத்தில் அனுமன் அவதரித்தார் என்கின்றன புராணங்கள். அதன்படி, இந்த ஆண்டு அனுமன் ஜெயந்தி மார்கழி மாதம் 4ம் தேதி நாளை மறுநாள் 19-12-2025 வெள்ளிக்கிழமை அனுசரிக்கப்பட உள்ளது.

ராமருக்கு உதவ தேவர்கள் சக்தி அளித்த வேளையில், சிவபெருமானின் அருளால் வாயு பகவான் மூலம் அஞ்சனை தேவிக்கு சக்தி சேர்க்கப்பட்டு அனுமன் அவதரித்தார் என்பது ராமாயணக் கதை. சீதையை மீட்கும் பணியில் ராமனுக்குத் துணையாக இருந்து, அசோகவனத்தில் சீதைக்கு நம்பிக்கை அளித்து ராம-சீதையின் இணைப்புக்கு காரணமானவர் அனுமன்.

அனுமன் ஜெயந்தி அன்று அதிகாலையில் எழுந்து குளித்து சிவப்பு மலர்கள் சூட்டி வழிபட வேண்டும். நெய் விளக்கு ஏற்றி, வெண்ணெய், வாழைப்பழம், வெற்றிலை, செந்தூரம் போன்றவற்றை நைவேத்தியமாக படைக்கலாம். சுந்தர காண்டம் பாராயணம் செய்தால் சகல சௌபாக்கியங்களும் கிடைக்கும் என்பது நம்பிக்கை. வெற்றிலை விருப்பங்களை நிறைவேற்றும், மல்லிகை கெட்ட சக்திகளை விலக்கும், வடைமாலை துன்பங்களை நீக்கும், சந்தனம் மங்களத்தை தரும், செந்தூரம் அறிவும் ஆற்றலும் பெருக்கும் என பக்தர்கள் நம்புகின்றனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
