மகிழ்ச்சி!! விண்வெளி செல்லும் முதல் சவூதி வீராங்கனை!!

 
ரய்யானா பர்னாவி

சமீபகாலமாக விண்வெளி தொடர்பான ஆராய்ச்சிகள் சவுதி அரேபியாவில் அதிகரித்து வருகிறது. அதிலும் சவுதி அரேபியாவுக்கும், ஐக்கிய அமீரகத்துக்கும் இடையே கடந்த சில ஆண்டுகளாக போட்டிகளும் ஏற்படத் தொடங்கியுள்ளன. அத்துடன் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகம் கொண்ட நாடு என்ற அடையாளத்தையும் சவுதி அரேபியா தனது திட்டங்களால் முறியடிக்க முயற்சி செய்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக கடந்த ஆண்டு முதல் சவுதி அரேபியாவில்  ”விஷன் 2030 ”என்ற விண்வெளித் திட்டத்தின் கீழ்  விண்வெளி வீரர்களுக்கு சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றது.  

ரய்யானா பர்னாவி

இந்நிலையில், விண்வெளிக்கு முதல் முறையாக விண்வெளி வீராங்கனையை சவுதி அரேபியா அனுப்ப உள்ளது. இதனை சவுதி அரசு ஊடகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிட்ட செய்திக்குறிப்பில்  “2023ம் ஆண்டு மே மாதம் 8ம் தேதி சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு  செல்லும் சவுதி விண்வெளி வீரர் அலி அல்-கர்னியுடன் சவுதியின் விண்வெளி வீராங்கனையான ரய்யானா பர்னாவி பயணம் செய்ய இருக்கிறார்” எனத் தெரிவித்துள்ளது.  சவுதி அரேபியாவை பொறுத்தவரை  பெண்களுக்கு கட்டுப்பாடுகள் ஏராளம்.

விண்வெளி

குறிப்பாக  முகம், உடல் தெரியாத அளவுக்கு ஆடைகள் அணிதல், கார் ஓட்டத் தடை, விளையாட்டுப் போட்டிகளை நேரடியாகப் பார்க்கத் தடை, சினிமா பார்க்கத் தடை என  பல கட்டுப்பாடுகள் இருந்து வந்தன. தற்போது படிப்படியாக அதில் பல தளர்வுகள் அளிக்கப்பட்டு வருவதும் குறிப்பிடத்தகக்து.  சவுதி அரேபியாவின் இளவரசர் முகம்மது பின் சல்மான் ஆட்சிக்குப் பின் பல்வேறு புதிய சீர்திருத்தங்கள் செய்யப்பட்டு வருகின்றன. அதன்படி  இவர் சமீபத்தில் பெண்கள் கார் ஓட்டுவதற்கும், ஓட்டுநர் உரிமம் பெற்றுக் கொள்ளலாம் என அறிவித்தார். அத்துடன் பெண்கள் திரையரங்குகளில் சென்று சினிமா பார்க்கவும் அனுமதி அளிக்கப்பட்டது. இந்நிலையில், சவுதி  வரலாற்றில் முதன் முறையாக இளம்பெண் ஒருவர் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு செல்ல இருக்கிறார்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web