ஹேப்பி... ’கட்டதுரை’ ரியாஸ்கான் வீட்டில் வளைகாப்பு!

 
’கட்டதுரை’ ரியாஸ்கான்

தமிழ் திரையுலகில் நட்சத்திர குடும்பமான  ரியாஸ் கானின் வீட்டில் வளைகாப்பு விசேஷம் விமரிசையாக நடத்தப்பட்டது.  ரியாஸ்கான் உமா ரியாஸ் தம்பதியினரின் மகன் மரியா ஜெனிஃபரை திருமணம் செய்து கொண்டார்.   கடந்த சில நாட்களுக்கு முன்பு கர்ப்பமாக இருப்பதாக  ஷாரிக் அறிவித்திருந்தார். இந்நிலையில் பிரம்மாண்டமாக மருமகளுக்கு ரியாஸ்கான் குடும்பம் வளைகாப்பு நடத்திய நிலையில் பல பிரபலங்களும் நேரில் வந்து அவரை வாழ்த்தி இருக்கின்றனர் . 

’கட்டதுரை’ ரியாஸ்கான்

வின்னர் படத்தில் கட்டதுரை  கேரக்டரில் நடித்து  பிரபலமானவர் ரியாஸ்கான் . இவர்  துணைகதாப்பாத்திரங்களில் அதற்கு முன்னும் பின்னரும் பல படங்களின்  நடித்திருக்கிறார். அவரது மனைவியான உமா ரியாஸ்  மௌனகுரு, அன்பே சிவம், பிரியாணி உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார். உமா ரியாஸ் கானின் தாயாரான கமலா காமேஷ் பல படங்களில் அம்மா கேரக்டரில் நடித்தவர். ரியாஸ்கான் உமா ரியாஸ் தம்பதிக்கு ஷாரிக் ஹசன், சமர்த் ஹாசன் என இரண்டு மகன்கள். 

’கட்டதுரை’ ரியாஸ்கான்

இதில் ஷாரிக் ஹாசன் பென்சில், டான் போன்ற படங்களில் நடித்ததோடு பிக்பாஸிலும் கலந்து கொண்டு பிரபலமானவர். 2024ல் மரியா ஜெனிஃபரை  காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஏற்கனவே திருமணமான மரியாவுக்கு  8 வயதில் குழந்தை இருப்பதும் குறிப்பிடத்தக்கது.   8 வயது மகளுடன் சிங்கிள் மதராக இருந்த தன்னை நல்ல தோழியாக ஏற்றுக் கொண்டதோடு மகளையும் கவனித்துக் கொண்டார் அதனால் தான் அவரை காதலித்தேன். அவர்களது பெற்றோரும் திருமணத்திற்கு சம்மதித்த நிலையில் தற்போது வாழ்க்கை நன்றாக சென்று கொண்டிருப்பதாக கூறியிருந்தார். இந்நிலையில்  மரியா ஹசன் கர்ப்பமாக இருப்பதாக கடந்த சில தினங்களுக்கு முன்பு சாரிக் ஹாசன் தனது இன்ஸ்டாகிராமில் பதிவு ஒன்றை வெளியிட்டு இருந்தார். தொடர்ந்து தம்பதிக்கு பலரும் வாழ்த்துக்கள் கூறி வந்த நிலையில்  இன்று பிரம்மாண்டமாக மரியா ஜெனிஃபருக்கு வளைகாப்பு நடந்தது. இதில் சினிமா, சின்னத்திரை நடிகர்கள் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர். 

நடிகர் ரியாஸ்கானின் நெருங்கிய நண்பரும் நடிகருமான பப்லு ஜெனிஃபருக்கு ஒரு தந்தை போல நலங்கு வைத்து வாழ்த்து தெரிவித்தார். தாத்தா பாட்டி ஆகப்போகும் ரியாஸ் கான் உமா ரியாஸ், பெற்றோர் ஆகப்போகும் ஷாரிக் - மரியா தம்பதியினர்க்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

 உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?