ப்ரெண்டுக்கு பர்த்டே... வாழ்த்தி பேனர் வைக்க முயன்ற 2 மாணவர்கள் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு!

 
 ப்ரெண்டுக்கு பர்த்டே...  வாழ்த்தி பேனர் வைக்க முயன்ற 2 மாணவர்கள் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு!
திரு​வண்​ணா​மலை மாவட்டத்தில், நண்பனின் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்து, டிஜிட்​டல் பேனர் வைக்க முயன்​ற 2 மாணவர்கள், மின்​சா​ரம் தாக்கி பரிதாபமாக உயி​ரிழந்​தனர். 

திரு​வண்​ணா​மலை மாவட்டம், அண்ணா நகர் 5வது தெரு​வைச் சேர்ந்​தவர் லோகேஸ்​வரன்​(15). திருநகரைச் சேர்ந்​தவர்  தனுஷ்கு​மார்​(17). இவர்கள் இரு​வரும் சில இளைஞர்​களு​டன் இணைந்​து, மணலூர்​பேட்டை சாலை​யில் தங்களது நண்​பரின் பிறந்த நாளுக்கு வாழ்த்து தெரிவித்து டிஜிட்​டல் பேனர் வைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். 

மின்சாரம்

அப்​போது டிஜிட்டல் பேனரில் உள்ள இரும்​புக் கம்பி அரு​கே​யுள்ள மின்​மாற்​றி​யில் உரசி​யதில், மின்​சா​ரம் பாய்ந்து லோகேஸ்​வரன், தனுஷ்கு​மார் ஆகிய இருவருமே சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்​தனர். 

இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்துச் சென்ற திரு​வண்​ணா​மலை நகர போலீ​சார்,  இரு​வரது உடல்​களை​யும் மீட்​டு பிரேதப் பரிசோதனைக்​காக அரசு மருத்​து​வ​மனைக்கு அனுப்​பி​வைத்​து விட்டு, விபத்து குறித்து வழக்​குப்பதிவு செய்து மேற்கொண்டு விசா​ரித்து வரு​கின்​றனர். 

தனுஷ்கு​மார் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழு​தி​ முடித்து விட்​டு, தேர்வு முடிவுக்​காக காத்​திருந்​துள்ளது குறிப்பிடத்தக்கது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web