சகோதரர் அஜித்குமாருக்கு என்னுடைய பிறந்தநாள் வாழ்த்துக்கள்… அண்ணாமலை வாழ்த்து!

 
அஜித்குமார், அண்ணாமலை

தமிழ் சினிமாவில் தல ஆக கொண்டாடப்பட்டு முன்னணி நடிகராக ரசிகர்களிடையே பெரும் வரவேற்பு பெற்றவர் நடிகர்  அஜித்குமார். இவர் கார் ரேசர். அதுமட்டுமின்றி துப்பாக்கி சுடுதல் உட்பட   பல போட்டிகளில் அஜித் ஆர்வம் உடையவராக இருந்து கலந்து கொள்கிறார். இவர் நடிப்பில் சமீபத்தில் குட் பேட் அக்லி திரைப்படம் வெளியாகி 200 கோடி வசூலை பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.  

அஜித்குமார், அண்ணாமலை
இந்நிலையில் நடிகர் அஜித் என்று தன்னுடைய 54வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். அவருக்கு திரையுலக பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் ரசிகர்கள் என பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
அந்த வகையில் பாஜக கட்சியின் முன்னாள் தலைவர் அண்ணாமலையும் நடிகர் அஜித்குமாருக்கு வாழ்த்துக்களை பதிவிட்டுள்ளார். இது குறித்து அவர் வெளியிடுள்ள எக்ஸ் பதிவில், தன்னுடைய கடுமையான உழைப்பாலும், தன்னம்பிக்கையாலும் விடாமுயற்சியாலும், நாட்டின் முக்கிய திரை கலைஞர்களில் ஒருவராக உயர்ந்து தேசத்தின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்மபூஷன் விருதினை வென்றுள்ளார். சகோதரர் அஜித்துக்கு என்னுடைய பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது

From around the web