அனைவரின் கனவுகளும் நிறைவேற வேண்டும் ... பிரதமர் மோடி புத்தாண்டு வாழ்த்து!

 
மோடி

2026-ம் ஆண்டு ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு உலகம் முழுவதும் தலைவர்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் வலைதளத்தில் நாட்டு மக்களுக்கு புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். 2026-ம் ஆண்டு அனைவருக்கும் ஆச்சரியம் தரும் நல்ல ஆண்டாக அமைய வேண்டும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த புதிய ஆண்டு நல்ல ஆரோக்கியம், வளம் மற்றும் வெற்றியை கொண்டு வரட்டும் என்று பிரதமர் மோடி வாழ்த்தியுள்ளார். ஒவ்வொருவரும் மேற்கொள்ளும் முயற்சிகள் வெற்றி பெற வேண்டும் என்றும், அனைவரின் கனவுகளும் நிறைவேற வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். சமூகத்தில் அமைதியும் மகிழ்ச்சியும் நிலவ இறைவனை வேண்டிக்கொள்வதாகவும் கூறியுள்ளார்.

புத்தாண்டை கொண்டாட நாடு முழுவதும் மக்கள் குடும்பத்தினரும் நண்பர்களும் ஒன்றுகூடி மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனர். பலர் காலை முதலே கோவில்கள் மற்றும் வழிபாட்டு தலங்களுக்கு சென்று பிரார்த்தனையில் ஈடுபட்டு வருகின்றனர். புத்தாண்டு உற்சாகம் நகரங்களின் பல பகுதிகளிலும் காணப்படுகிறது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!