புத்தாண்டு விடுமுறை... தமிழகத்தில் சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

 
அரசு பேருந்து

உலகம் முழுவதும் புத்தாண்டைக் கொண்டாட தயாராகி வருகின்றனர். இந்த வருடத்தின் கடைசி தினத்தை நாம் கடந்து வரும் நிலையில், புத்தாண்டு கால தொடர் விடுமுறையை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் பயணிகளின் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. ரயிலில் டிக்கெட் கிடைக்கவில்லை என்று ஆம்னி பேருந்துகளில் அதிக பணம் கொடுத்து டிக்கெட் எடுக்காதீங்க. அரசு விரைவு பேருந்துகளில் இன்னும் நிறைய டிக்கெட்டுகள் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

பயணிகள்

புத்தாண்டு விடுமுறையை முன்னிட்டு, சென்னை மற்றும் பிற ஊர்களில் வசிப்பவர்கள் தங்களின் சொந்த ஊர்களுக்கு சென்றிருக்கும் நிலையில், அவர்கள் மீண்டும் சென்னைக்கு திரும்ப வசதியாகவும், அரையாண்டு தேர்வுகள் முடிந்து சுற்றுலா மற்றும் சொந்த ஊர்களுக்கு சென்றவர்கள் திரும்ப வசதியாக இந்த சிறப்பு பேருந்துகள் அறிவிக்கப்பட்டு, இயக்கப்படுகின்றன. 

சென்னையில் இருந்து நெல்லை, நாகர்கோவில், மார்த்தாண்டம், தூத்துக்குடி, வேளாங்கண்ணி மற்றும் இதர ஊர்களுக்கு பயணம் மேற்கொள்ள இந்த சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகிறது. 

பேருந்து நிலையம்

இதே போல் பிற நகரங்களில் இருந்து சென்னைக்கும், தென் மாவட்டங்களுக்கும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. தற்போது தென் மாவட்டங்களில் கனமழை ஓய்ந்து, வெள்ளம் வடிந்து வரும் நிலையில், உறவினர்களை நேரில் சென்று பார்க்கவும் பலரும் முடிவு செய்துள்ளதால், தேவைக்கேற்ப கூடுதல் பேருந்துகள் இயக்கப்படுகிறது. 

மார்கழிக் கோலத்தில் மட்டும் பூசணிப்பூ வைப்பது ஏன்?!

மார்கழி மாதத்தில் இந்த தவற மட்டும் செய்யாதீங்க!

மார்கழி குளிர்ல தயிர் சாப்பிடலாமா... மருத்துவம் என்ன சொல்கிறது?!

மார்கழி மாதம் ஏன் திருமணம் செய்யக்கூடாது... பிரமிக்க வைக்கும் விஞ்ஞான உண்மைகள்!

From around the web