ரஜினி பொங்கல் வாழ்த்து... தலைவரைப் பார்க்க திரண்ட 'ரசிகர் படை'! கொடியுடன் வந்த ரசிகரால் பரபரப்பு!

 
ரஜினிகாந்த்

ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையன்று தனது ரசிகர்களைச் சந்தித்து வாழ்த்துச் சொல்வதை ரஜினிகாந்த் வழக்கமாகக் கொண்டுள்ளார். அந்த வகையில், 2026ம் ஆண்டின் இந்தப் பொங்கல் திருநாளிலும் ரஜினியை நேரில் காண ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருந்தனர். சென்னை போயஸ் கார்டனில் உள்ள ரஜினிகாந்தின் இல்லத்திற்கு முன்பாகத் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் ரசிகர்கள் வந்து குவிந்துள்ளனர்.

சென்னை போயஸ் கார்டனில் உள்ள தனது வீட்டின் முன் குவிந்து திரண்டிருந்த ரசிகர்களை நோக்கி நடிகர் ரஜினிகாந்த் கைகளை அசைத்து பொங்கல் வாழ்த்து தெரிவித்தார். ரஜினியை நேரில் பார்த்து ஆரவாரம் செய்த அவரின் ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துத் தெரிவித்து சால்வை உள்ளிட்ட பொருட்களையும் அன்பளிப்பாக வழங்கினர்.

தொடர்ந்து அங்கு திரண்டிருந்த செய்தியாளர்களிடம் நடிகர் ரஜினிகாந்த் பேசுகையில், “ எல்லாருக்கும் என்னுடைய பொங்கல் நல்வாழ்த்துகள். எல்லாரும் நன்றாக இருக்க வேண்டும். முக்கியமாக விவசாயிகள் இந்த நாட்டின் முதுகெலும்பு. அவர்கள் சந்தோஷமாக இருந்தால்தான் மற்றவர்கள் அனைவரும் சந்தோசமாக இருக்க முடியும்” என்றார். அதைத் தொடர்ந்து சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் புதிய படத்துக்கான அப்டேட் குறித்து செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு அவர், “ஏப்ரலில் தொடங்கும் என்றும் தெரிவித்தார்.

திரண்டிருந்த ரசிகர்களில் ஒருவர், தனது கையில் ஒரு பெரிய கொடியை ஏந்தியபடி ரஜினியின் வருகைக்காகக் காத்திருந்தது அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. அந்த ரசிகர் தனது தலைவன் மீதான பற்றை வெளிப்படுத்தும் விதமாக உற்சாகமாக முழக்கமிட்டது அங்கிருந்த மற்ற ரசிகர்களையும் உற்சாகப்படுத்தியது. "தலைவா.. தலைவா.." என ரசிகர்கள் எழுப்பும் முழக்கம் அந்தப் பகுதி முழுவதையும் அதிரச் செய்துள்ளது. 

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!