தவெக தலைவர் விஜய் தைப்பூச திருநாள் வாழ்த்து செய்தி!

 
தைப்பூசம் முருகன் திருச்செந்தூர் விஜய் தைப்பூசம் முருகன் திருச்செந்தூர் விஜய்

உலகெங்கும் வாழும் தமிழர்களால் இன்று தைப்பூசத் திருவிழா மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் (த.வெ.க) தலைவர் விஜய் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், தனது அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பக்கத்தில் முருகப் பெருமானைப் போற்றி வணங்கும் தமிழ்ச் சொந்தங்களுக்குத் தனது வாழ்த்துகளைப் பகிர்ந்துள்ளார். அதில் அவர், "தமிழ்க் கடவுள் முருகப் பெருமானைப் போற்றி வணங்கும், உலகெங்கும் வாழும் தமிழ்ச் சொந்தங்கள் அனைவர் இல்லங்களிலும் வளம், மகிழ்ச்சி, வெற்றி ஆகியவை நிலைக்கட்டும். இனிய தைப்பூசத் திருநாள் நல்வாழ்த்துகள்!"

தவெக விஜய்

தமிழக அரசியலில் தனது கட்சியை வலுப்படுத்தி வரும் விஜய், மதச் சார்பற்ற அதே வேளையில் மக்களின் கலாச்சாரம் மற்றும் ஆன்மீக நம்பிக்கைகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் தனது வாழ்த்துகளைத் தொடர்ந்து பதிவிட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்று அதிகாலை முதலே அறுபடை வீடுகள் உட்படத் தமிழகத்தின் அனைத்து முருகன் கோவில்களிலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் காவடி எடுத்தும், பாதயாத்திரை சென்றும் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். கடற்கரை ஓரத்திலுள்ள இக்கோவிலில் அதிகாலை முதலே பக்தர்கள் புனித நீராடி முருகனை வழிபட்டு வருகின்றனர்.

தைப்பூசம்

தைப்பூசத்தை முன்னிட்டு வடலூர் ராமலிங்க அடிகளார் நிறுவிய சத்திய ஞான சபையில் இன்று 'ஜோதி தரிசனம்' நடைபெறுகிறது. இதற்காகத் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் குவிந்துள்ளனர். தமிழக வெற்றிக் கழகம் வரும் 2026 சட்டமன்றத் தேர்தலை இலக்காகக் கொண்டு செயல்பட்டு வரும் நிலையில், விஜய்யின் இத்தகைய வாழ்த்துச் செய்திகள் அவரது தொண்டர்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளன.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!