தேசிய ஜனநாயக கூட்டணி குடும்பத்தில் அதிமுக இணைந்திருப்பது மகிழ்ச்சி ... பிரதமர் மோடி தமிழில் பதிவு!

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூட்டணி பேச்சுவார்த்தைக்காக நேற்று சென்னை வந்திருந்தார். இது குறித்து பிரதமர் மோடி நெகிழ்ச்சி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அதிமுக பொதுச் செயலரும், எதிா்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி (இபிஎஸ்) தலைமையில் 2026 பேரவைத் தோ்தல் எதிா்கொள்ளப்படும். இதற்காக குறைந்தபட்ச செயல்திட்டம் வகுக்கப்படும் என அமித்ஷா கூறியதை நினைவு கூர்ந்தார்.
வலுவாக இணைவோம், தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்காக ஒன்றுபடுவோம்!
— Narendra Modi (@narendramodi) April 11, 2025
தேசிய ஜனநாயகக் கூட்டணி என்ற குடும்பத்தில் அஇஅதிமுக இணைந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. தேசிய ஜனநாயகக் கூட்டணியின் இதர கூட்டாளிகளுடன் ஒன்றிணைந்து, நாம் தமிழ்நாட்டை முன்னேற்றத்தின் புதிய உச்சங்களுக்குக்…

இதையடுத்து அதிமுக-பாஜக கூட்டணி தொடா்பாக பிரதமர் நரேந்திர மோடி எக்ஸ் வலைதளத்தில் தமிழில் மகிழ்ச்சி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ”தேசிய ஜனநாயக கூட்டணி என்ற குடும்பத்தில் அதிமுக இணைந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. தேசிய ஜனநாயக கூட்டணியின் இதர கூட்டாளிகளுடன் ஒன்றிணைந்து, தமிழ்நாட்டை முன்னேற்றத்தின் புதிய உச்சங்களுக்குக் கொண்டு செல்வோம்; மாநிலத்திற்கு அயராது பாடுபடுவோம்.
மாமனிதா் எம்ஜிஆா் மற்றும் ஜெயலலிதாவின் தொலைநோக்குப் பாா்வையை செயல்படுத்தும் ஓர் அரசை உறுதி செய்வோம். தமிழ்நாட்டின் நலனுக்கும், முன்னேற்றத்திற்கும், தமிழ் கலாச்சாரத்தின் தனித்துவத்தைப் பாதுகாப்பதற்கும் ஊழல் மலிந்த பிரிவினைவாத திமுகவை விரைவாக வீழ்த்துவது முக்கியமானது. அதனை அதிமுக-பாஜக கூட்டணி செய்து முடிக்கும்' எனக் கூறியுள்ளார்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!