பொதுமக்களுக்கு தொல்லை... 33 குரங்குகளை கூண்டு வைத்து பிடித்த வனத்துறை!

 
பொதுமக்களுக்கு தொல்லை... 33 குரங்குகளை கூண்டு வைத்து பிடித்த வனத்துறை!
 

திருநெல்வேலி மாவட்டம், பாபநாசம் பகுதியில் பொதுமக்களுக்கு தொல்லை கொடுத்த 33 குரங்குகளை வனத்துறையினர் கூண்டு வைத்து பிடித்தனர். 

களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம், அம்பாசமுத்திரம் வனக்கோட்டம், பாபநாசம் வனச்சரகத்திற்கு உட்பட்ட சுந்தராபுரம் தெரு - வி.கே.புரம், வேம்பையாபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் குரங்குகள் கூட்டமாக சென்று அட்டகாசம் செய்து வந்தன.

பொதுமக்களுக்கு தொல்லை... 33 குரங்குகளை கூண்டு வைத்து பிடித்த வனத்துறை!

இந்த குரங்குகளின் அட்டகாசத்தை தாங்க முடியாமல் பொது மக்கள் வனத்துறையினரிடம் குரங்குகளை பிடிக்குமாறு கோரிக்கை விடுத்தனர். பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட பல்வேறு கோரிக்கைகளின் அடிப்படையில், வனத்துறையினர் அப்பகுதிகளில் குரங்குகளை பிடிக்க பொறி வைத்தனர்.

இந்நிலையில் 33 குரங்குகள் பாபநாசம் வன சரக வனப்பணியாளர்கள் மூலம் கூண்டு வைத்து பிடிக்கப்பட்டது. இதனையடுத்து மீண்டும் மக்கள் குடியிருப்பு பகுதிக்குள் வராதவாறு அடர்ந்த வனப்பகுதிக்குள் நல்ல முறையில் திரும்ப விடப்பட்டுள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது