காதலர் தினத்தில் ஹார்திக் பாண்டியாவின் சிறப்பு பரிசு: காதலிக்காக டாட்டூ!

 
ஹர்திக்

 

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்டியா  காதலர் தினத்தை முன்னிட்டு தனது காதலி மஹிகா ஷர்மாவுக்கு வித்தியாசமான பரிசை வழங்கியுள்ளார். அவரது பின் கழுத்தில் போடப்பட்டுள்ள அழகிய டாட்டூ இதற்குச் சாட்சியாக உள்ளது.இந்த டாட்டூ வெறும் அலங்காரமாக இல்லாமல், ஆழமான அர்த்தத்தைக் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

 

மஹிகா என்பதைக் குறிக்கும் ஆங்கில ‘M’ எழுத்தின் பின்னணியில், இரண்டு சிறுத்தைகள் தங்களது பலம் மற்றும் தோழமையை ஒருங்கிணைக்கும் விதத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது காதல், உறுதி மற்றும் ஒருமித்த பயணத்தை பிரதிபலிப்பதாக கூறப்படுகிறது.பிரபல டாட்டூ கலைஞர் Sunny Bhanushali கைவண்ணத்தில் வடிவமைக்கப்பட்ட இந்த டாட்டூ, ‘ஏலியன்ஸ் டாட்டூ’ ஸ்டூடியோவில் முன்னணி கலைஞர் Tushar Marane மூலம் உருவாக்கப்பட்டுள்ளது.

ஹார்திக் பாண்ட்யா, தன்னுடைய காதலியுடன் உள்ள உறவை வெளிப்படுத்தும் வகையில் தனிப்பட்ட டிசைன் ஒன்றை உருவாக்கும்படி கலைஞர்களிடம் கேட்டுக் கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன்படி, ஒரு சிறுத்தை சக்தி, இலக்கு மற்றும் முன்னேற்றத்தை குறிக்கும் வகையில் ஓடும் தோற்றத்திலும், மற்றொன்று நிழல் போல இணைந்து பயணிக்கும் வடிவிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது.இந்த காதலர் தினத்தில், மஹிகாவுக்கு ஹார்திக் அளித்த இந்த டாட்டூ பரிசு சமூக வலைதளங்களில் கவனம் பெற்றுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!