ஒரே நாளில் 2 மிரட்டல் சாதனைகள் படைத்த ஹர்த்திக் பாண்டியா... தென்னாப்பிரிக்காவைச் சிதறடித்த வேகம்!

 
ஹர்த்திக் பாண்டியா

அகமதாபாத்தில் நேற்று நடைபெற்ற தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி மற்றும் ஐந்தாவது டி20 போட்டியில், இந்திய அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் ஹார்திக் பாண்டியா தனது அசுர வேக ஆட்டத்தால் இரண்டு பிரம்மாண்ட சாதனைகளை முறியடித்துள்ளார். இந்தப் போட்டியில் இந்திய அணி 30 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று, 5 போட்டிகள் கொண்ட தொடரை 3-1 என்ற கணக்கில் கைப்பற்றி முத்திரை பதித்தது. இளம் வீரர் திலக் வர்மா 73 ரன்கள் குவித்துத் தூணாக நிற்க, மறுபுறம் ஹார்திக் பாண்டியா தென்னாப்பிரிக்க பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்து 16 பந்துகளிலேயே அரைசதம் கடந்து மைதானத்தை அதிர வைத்தார்.


யுவராஜ் சிங்கிற்கு அடுத்த இடத்தில் பாண்டியா: இந்த அதிரடி ஆட்டத்தின் மூலம், சர்வதேச டி20 போட்டிகளில் அதிவேக அரைசதம் விளாசிய இரண்டாவது இந்திய வீரர் என்ற பெருமையை ஹார்திக் பாண்டியா பெற்றுள்ளார். இதற்கு முன்னதாக 2007-ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக யுவராஜ் சிங் 12 பந்துகளில் அரைசதம் அடித்ததே முதலிடத்தில் உள்ளது. இப்போது 18 ஆண்டுகாலக் காத்திருப்புக்குப் பிறகு, 16 பந்துகளில் அரைசதம் அடித்து அபிஷேக் சர்மா (17 பந்து), கே.எல்.ராகுல் (18 பந்து) ஆகியோரைப் பின்னுக்குத் தள்ளி பாண்டியா இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளார். பேட்டிங்கில் 63 ரன்கள் விளாசியதுடன், பந்துவீச்சிலும் அசத்திய அவருக்கு ‘ஆட்ட நாயகன்’ விருது வழங்கப்பட்டது.


2000 ரன்கள் மைல்கல்: அதிவேக அரைசதம் மட்டுமல்லாமல், சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 2000 ரன்களைக் கடந்த ஐந்தாவது இந்திய வீரர் என்ற வரலாற்றுச் சாதனையையும் பாண்டியா படைத்தார். இதற்கு முன் ரோகித் சர்மா, விராட் கோலி, சூர்யகுமார் யாதவ் மற்றும் கே.எல்.ராகுல் ஆகியோர் மட்டுமே இந்த மைல்கல்லை எட்டியுள்ளனர். இதுவரை 124 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள ஹார்திக் பாண்டியா, 2002 ரன்களுடன் 101 விக்கெட்டுகளையும் வீழ்த்தி, இந்தியாவின் மிகச்சிறந்த டி20 ஆல்ரவுண்டராகத் தன்னை மீண்டும் நிரூபித்துள்ளார். இந்திய அணியின் இந்தத் தொடர் வெற்றி மற்றும் பாண்டியாவின் ஃபார்ம் வரும் உலகக்கோப்பைத் தொடருக்குப் பெரும் நம்பிக்கையை அளித்துள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!