ஹரி நாடார் கைது... ரூ.30 கோடி கடன் ஆசை காட்டி ரூ.77 லட்சம் மோசடி!
பேருந்து உரிமையாளருக்கு ரூ.30 கோடி கடன் வாங்கித் தருவதாக கூறி ரூ.77 லட்சம் பெற்று ஏமாற்றிய வழக்கில் அரசியல் கட்சி நடத்தி வரும் ஹரி நாடார் கைது செய்யப்பட்டார். சென்னை மத்தியக் குற்றப்பிரிவில் பதிவு செய்யப்பட்ட பழைய வழக்குகளை போலீஸ் கமிஷனர் அருண் ஆய்வு செய்ததை தொடர்ந்து, நிலுவை வழக்குகளில் குற்றவாளிகளை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டது. அதன் அடிப்படையில் இந்த மோசடி வழக்கு தீவிரமாக விசாரிக்கப்பட்டது.

சென்னை கோயம்பேட்டில் மேட்டூர் சூப்பர் சர்வீஸ் உரிமையாளர் ஆனந்த் குமார், தனது டிராவல்ஸ் தொழிலை விரிவுபடுத்த ரூ.30 கோடி கடன் தேவைப்பட்டதால், சேலத்தைச் சேர்ந்த பாலு மூலம் ஹரி நாடாரை அணுகினார். கடன் பெற்றுத் தர ரூ.77 லட்சம் கமிஷன் கேட்ட ஹரி நாடாருக்கு, ரூ.70 லட்சம் வங்கி மூலமாகவும், ரூ.7 லட்சம் ரொக்கமாகவும் வழங்கப்பட்டது. பின்னர் ரூ.30 கோடிக்கு இரண்டு வரைவோலைகள் கொடுக்கப்பட்ட நிலையில், அவை போலி என்பது தெரியவந்தது.

இதையடுத்து வழக்குப்பதிவு செய்து தேடப்பட்ட ஹரி நாடார், சென்னை இருந்து திருச்சிக்கு காரில் சென்ற போது திருச்சி பைபாசில் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து ரூ.12.50 லட்சம் பணம், 7 செல்போன்கள், 2 டாங்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த மோசடிக்கு உடந்தையாக இருந்த பாலுவும் கைது செய்யப்பட்டார். நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த ஹரி நாடார், முன்பும் பல கோடி ரூபாய் மோசடி வழக்குகளில் சிக்கி கர்நாடகாவில் கைது செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
