நடிகர் ஹரிஷ் கல்யாணுக்கு பெண் குழந்தை... வைரலாகும் இன்ஸ்டா!
தமிழ் திரைப்பட நடிகர் ஹரிஷ் கல்யாண் – நர்மதா தம்பதிகளுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்த மகிழ்ச்சியான செய்தியை ஹரிஷ் கல்யாண் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். “நானும், என் மனைவியும் பெற்றோர்களாகி இருக்கிறோம். தாயும், மகளும் நலமாக உள்ளனர்” என அவர் பதிவிட்டுள்ளார். ரசிகர்கள் மற்றும் திரையுலக நண்பர்கள் தம்பதிகளுக்கு வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர்.
2010ஆம் ஆண்டு வெளியான சிந்து சமவெளி திரைப்படத்தின் மூலம் ஹரிஷ் கல்யாண் நடிகராக அறிமுகமானார். தொடர்ந்து பியார் ப்ரேமா காதல் படம் அவருக்கு தனித்த அடையாளத்தை பெற்றுத்தந்தது. சமீபத்தில் வெளியான பார்க்கிங் மற்றும் லப்பர் பந்து ஆகிய படங்கள் அவருக்கு நல்ல வரவேற்பை பெற்றுத் தந்தன.
திரையுலகில் முன்னேற்றம் கண்டுவரும் நிலையில், குடும்ப வாழ்விலும் புதிய அத்தியாயத்தை தொடங்கியுள்ள ஹரிஷ் கல்யாணுக்கு ரசிகர்கள் சமூக வலைதளங்களில் தொடர்ந்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த இனிய செய்தி அவரது ரசிகர்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
