இந்திய கப்பல்களுக்கு அனுமதி தரப்படல... வெளியுறவு அமைச்சகம் விளக்கம்!
ஈரான் வழியாக இந்திய எண்ணெய் கப்பல்கள் செல்ல அனுமதி வழங்கப்பட்டதாக சில ஊடகங்களில் வெளியான தகவலை மத்திய வெளியுறவு அமைச்சகம் மறுத்துள்ளது. இந்த தகவல் தவறானது என்றும், இதுபற்றி எந்த இறுதி முடிவும் எட்டப்படவில்லை என்றும் அமைச்சகம் தெரிவித்துள்ளது. வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் ஈரான் வெளியுறவு அமைச்சருடன் பேசியிருந்தாலும் இதுவரை எந்த உறுதியான ஒப்பந்தமும் செய்யப்படவில்லை என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில் ஈரான் தரப்பும் இந்திய கப்பல்களுக்கு சிறப்பு அனுமதி வழங்கியதாக வெளியான தகவலை ஏற்கனவே மறுத்திருந்தது. ஹார்முஸ் நீரிணை வழி முடக்கம் நீடித்து வரும் நிலையில், இந்தியாவின் எண்ணெய் இறக்குமதி பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து வரும் எல்பிஜி மற்றும் கச்சா எண்ணெயின் பெரும்பகுதி இந்த பாதை வழியாகவே வருவதால் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதன் காரணமாக வணிக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு பல இடங்களில் கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. உணவகங்கள், விடுதிகள், சிறு தொழில்கள் மற்றும் திருமண மண்டபங்கள் போன்றவை இதனால் பாதிக்கப்பட்டுள்ளன. மாற்று இறக்குமதி பாதைகளை இந்தியா ஆராய்ந்து வரும் நிலையில், போர் சூழல் தொடர்ந்தால் இந்த பிரச்சினை நீடிக்கலாம் என நிபுணர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
