இந்தியக் கப்பல்களுக்கு மட்டும் 'பச்சைக்கொடி'... ஹார்முஸ் ஜலசந்தியில் ஈரானின் பாதுகாப்பான வழித்தடம்!

 
india india

மேற்கு ஆசியாவில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலிய படைகள் நடத்திய தாக்குதலால் கொதிப்படைந்துள்ள ஈரான், பதிலுக்கு ஏவுகணைகள் மற்றும் ஆளில்லா விமானங்களைக் கொண்டு சரக்குக் கப்பல்களைக் குறிவைத்துத் தாக்கி வருகிறது. இந்த மோதலில் இந்தியாவுக்குக் கச்சா எண்ணெய் ஏற்றி வந்த கப்பல் ஒன்று எதிர்பாராத விதமாகச் சிக்கிய நிலையில், பாதுகாப்பு கருதி சுமார் 24 எரிபொருள் கப்பல்கள் நடுக்கடலிலேயே நிறுத்தப்பட்டன. இதனால் நாட்டில் சமையல் எரிவாயு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உருவான நிலையில், பிரதமர் மோடி அவர்கள் ஈரான் அதிபர் மசூத் பெசஸ்கியானுடன் கடந்த பன்னிரண்டாம் தேதி அவசரப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.

இந்தியப் பிரதமரின் இந்தச் சாதுர்யமான பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து, இந்தியக் கப்பல்கள் மட்டும் பாதுகாப்பாகச் செல்ல ஈரான் அரசு ஒப்புதல் அளித்துள்ளது. வழக்கமான ஆபத்தான பாதையைத் தவிர்த்து, ஈரானின் லார்க் தீவைச் சுற்றிச் செல்லும் புதிய பாதுகாப்பான வழித்தடத்தை ஈரான் கடற்படை இந்தியாவிற்காக ஒதுக்கியுள்ளது. இந்த வழியாக வரும்போது இந்தியக் கப்பல்களின் அடையாளங்களை ஈரான் படையினர் நேரடியாகப் பார்த்து உறுதி செய்ய முடியும் என்பதால், எவ்விதத் தாக்குதலுக்கும் உள்ளாகாமல் எரிபொருள் கப்பல்கள் கரை சேர வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இந்தச் சிறப்பு ஒப்பந்தத்தின் அடிப்படையில், சுமார் 22  எரிபொருள் கப்பல்கள் தற்போது ஹார்முஸ் ஜலசந்தியைக் கடந்து இந்தியாவை நோக்கிப் பயணிக்கத் தொடங்கியுள்ளதாகச் சர்வதேச கடல்சார் உளவு நிறுவனங்கள் உறுதிப்படுத்தியுள்ளன. உலக நாடுகளின் கப்பல்கள் யாவும் போர் பயத்தில் நடுக்கடலில் முடங்கிக் கிடக்கும் நிலையில், இந்தியாவின் ராஜதந்திர முயற்சியால் நமது நாட்டுக்குத் தேவையான எரிபொருள் தடையின்றி வருவது பெரும் சாதனையாகப் பார்க்கப்படுகிறது. மத்திய அரசின் இந்த மின்னல் வேக நடவடிக்கையால் நாட்டின் எரிசக்தி பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதுடன், பொதுமக்களின் கவலையும் நீங்கியுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!