இங்கிலாந்தில் இந்திய மாணவர் கத்தியால் குத்தி படுகொலை !

 
விஜய்குமார்
 

இங்கிலாந்தில் மேல்படிப்பிற்காக சென்ற இந்திய மாணவர் விஜய் குமார் (30) கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் கவலையை எழுப்பியுள்ளது. ஹரியானா மாநிலம் சார்கி தாத்ரியைச் சேர்ந்த இவர், மத்திய கலால் மற்றும் சுங்கத் துறையில் பணிபுரிந்ததை விட்டு இந்த ஆண்டு ஆரம்பத்தில் இங்கிலாந்துக்கு உயர் கல்விக்காக புறப்பட்டார். பிரிஸ்டலில் உள்ள மேற்கு இங்கிலாந்து பல்கலைக்கழகத்தில் அவர் படித்து வந்தார்.

நவம்பர் 15 அன்று வொர்செஸ்டர் பார்போர்ன் சாலையில் பலத்த காயங்களுடன் விஜய் கிடந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார். உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாலும், சிகிச்சைக்கு இணங்காமல் உயிரிழந்தார். மர்ம நபர்கள் குழுவால் அவர் கத்தியால் தாக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகத்தின் பேரில் 5 பேர் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

ஆகாயம் தொட்ட கனவுடன் புறப்பட்ட விஜய் இப்படியாக உயிரிழந்தது குடும்பத்தினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அவரது உடலை இந்தியா கொண்டு வர உதவ வேண்டும் என குடும்பம் வெளியுறவு அமைச்சகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது. வெளிநாட்டில் படிக்கும் தமிழர்களும் இந்தியர்களும் பாதுகாப்பு குறித்து அச்சத்தில் உள்ளனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!