பரபரப்பு... ஏசி கோச்சில் ஏசி, ஃபேன் எதுவுமே வேலை செய்யல... அபாயச் சங்கிலியை இழுத்து ரயிலை நிறுத்திய பயணிகள்!

 
அபாயச் சங்கிலியை இழுத்து ரயிலை நிறுத்திய பயணிகள் அபாயச் சங்கிலியை இழுத்து ரயிலை நிறுத்திய பயணிகள்
சென்னை தாம்பரத்திலிருந்து  செங்கோட்டைக்கு இரவு 9 மணிக்கு புறப்பட வேண்டிய சிலம்பு விரைவு ரயிலில் இரண்டு ஏ.சி பெட்டிகள் இணைக்க வேண்டும். ஆனால் ஒரு ஏசி பெட்டியும், மற்றொரு ஏ.சி பெட்டிக்கு பதில் இரண்டாம் வகுப்பு பெட்டி (B-2) இணைக்கப்பட்டு இருந்தது.   இந்த பெட்டியில் ஏற வந்த 47 பயணிகள் ஏசி இல்லாமல் இருந்ததால்  ரயில்வே நிர்வாகத்தில் அலட்சியம் கண்டு அதிர்ந்தனர். 

இதனால் ரயில் புறப்பட தொடங்கும் முன்பே  அபாய சங்கிலியை இழுத்து ரயிலை நிறுத்திவிட்டனர்.  இதனால் ரயில் பிரேக் சிஸ்டம் ஜாம் ஆகி ரயில் புறப்படவில்லை இது குறித்து விசாரிக்க வந்த டிக்கெட் பரிசோதகரிடம் தெரிவித்தபோது, அவர் நிலைய மேலாளருக்கு தகவல் அளித்தார். அதே வேளையில் ரயில் நடைமேடையில் அமர்ந்து பயணிகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அரை மணி நேரம் கழிந்துவந்த நிலைய மேலாளரிடம் பயணிகள் அலட்சியமாக செயல்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். 

2 ம் வகுப்பு கட்டணம் போக மீத கட்டணம் வழங்க வேண்டும் என கேட்டனர். அதற்கு ஒப்புதல் அளித்த நிலையில் ஒன்றரை மணி நேரம் தாமதமாக சிலம்பு விரைவு ரயில் புறப்பட்டு சென்றது. இதனால் ரயில் நிலையத்தில் ஒன்றரை மணி நேரத்திற்கு மேலாக பரபரப்பு ஏற்பட்டது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?