பரபரப்பு... நடிகை சுவாசிகாவுக்கு படப்பிடிப்பில் காயம்!

 
நடிகை சுவாசிகாவுக்கு படப்பிடிப்பில் காயம்

தமிழ் திரையுலகில் தனக்கென தனி முத்திரை பதித்து முண்ணனி நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் நடிகர் சூர்யா. இவர்  தனது 45-வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு தற்காலிகமாக 'சூர்யா 45' என்று பெயரிடப்பட்டுள்ளது.  

டிரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகி வரும்   இப்படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைக்க உள்ளார். இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் த்ரிஷா நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.  20 வருடங்கள் இடைவெளிக்கு பிறகு சூர்யா-த்ரிஷா இணைந்திருப்பதால் இப்போதே படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இப்படத்தில் சுவாசிகா, இந்திரன்ஸ், யோகி பாபு, ஷிவாதா, சுப்ரீத் ரெட்டி, அனகா மாயா ரவி மற்றும் நட்டி நட்ராஜ் ஆகியோர் நடித்து வருகின்றனர். முதற்கட்ட படப்பிடிப்பு பணிகள் கோவையில் நடைபெற்று முடிவடைந்துள்ளது. அதனை தொடர்ந்து இரண்டாம் கட்ட படப்பிடிப்பு பணிகள் சென்னையில் நடைபெற்றன.   

நடிகை சுவாசிகாவுக்கு படப்பிடிப்பில் காயம்
தற்போது ஐதராபாத்திலுள்ள ராமோஜி பிலிம் சிட்டியில் 'சூர்யா 45' படப்பிடிப்பு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில்  இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகை சுவாசிகாவிற்கு படப்பிடிப்பு தளத்தில்  அவரது இடது கையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. காயம் சரியான பின்னர் மீண்டும் படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என அதிர்ச்சி தரும் தகவல்கள் வெளியாகியுள்ளன.   சண்டை காட்சியின் போது ஏற்பட்ட காயத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளார்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

 உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?