பரபரப்பு... தண்ணீர் பாய்ச்சுவதில் தகராறு... ரவுடி படப்பை குணா கைது!

 
படப்பை குணா


தமிழகத்தில் காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம்  மதுரமங்கலம் பகுதியில் வசித்து வருபவர்  பிரபல ரவுடி படப்பை குணா. இவர் மீது கொலை, கொலை முயற்சி, கட்டப் பஞ்சாயத்து உட்பட  40க்கும் மேற்பட்ட வழக்குகள் காஞ்சிபுரம் செங்கல்பட்டு மற்றும் திருவள்ளுார் மாவட்ட காவல் நிலையங்களில் நிலுவையில் உள்ளன.

சுங்குவார்சத்திரம்  
இந்நிலையில் மதுரமங்கலம் கிராமத்தில் நெற்பயிர் சாகுபடி செய்துள்ள விளைநிலங்களுக்கு தண்ணீர் பாய்ச்சுவதில்  தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த தகராறில் அதே பகுதியில் வசித்து வரும்  மோகன் என்பவரை குணா மிரட்டல் விடுத்துள்ளார். 

கைது
அத்துடன்  அவரை தாக்கியதாக குணா மீது சுங்குவார்சத்திரம் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது . இந்தப் புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்ட சுங்குவார்சத்திரம் போலீசார், ரவுடி குணா மீது கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்து. நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

 உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web