பரபரப்பு... இந்திய வைர வியாபாரி மெஹுல் சோக்ஸி அதிரடி கைது!

தஹவ்வூர் ராணாவுக்குப் பிறகு, இப்போது இந்தியாவின் தேடப்படும் குற்றவாளியான மெஹுல் சோக்ஸியும் இந்தியா வரவுள்ளார். பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடியில் முக்கிய குற்றவாளியான மெஹுல் சோக்ஸி கைது செய்யப்பட்டுள்ளார். மெஹுல் சோக்ஸி இந்தியாவிலிருந்து சுமார் 6391 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பெல்ஜியத்தில் பதுங்கியிருந்தார். இந்தியாவின் பிடியிலிருந்து வெகு தூரத்தில் இருப்பதால் கைது செய்வது சாத்தியமில்லை என அவர் நினைத்திருந்தார். ஆனால் இந்தியாவிலிருந்தபடியே அவருக்கான ஸ்கெட்ச் போட்டு தூக்கியுள்ளது ED.
தப்பியோடிய வைர வியாபாரி மெஹுல் சோக்சியை பெல்ஜியம் போலீசார் கைது செய்தனர். பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடியுடன் தொடர்புடைய ஒரு பெரிய நிதி மோசடியில் மெஹுல் சோக்ஸி மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அவர் இந்தியாவில் இருந்து தப்பியோடி பல இடங்களில் தலைமறைவாக இருந்தார். இவர் சில நாட்கள் ஆன்டிகுவாவிலு, சில நாட்கள் டொமினிகாவில் ஒளிந்து கொண்டார். இதன் பிறகு அவர் சிகிச்சைக்காக பெல்ஜியத்திற்கு வந்திருப்பதாக அரசாங்கத்திற்கு ஒரு லீட் கிடைத்துள்ளது.
அதை வைத்து அனைத்து விஷயங்களும் சரியாக இருப்பதை உறுதிய செய்த அமலாக்கத்துறை பெல்ஜியம் போலீஸின் உதவியுடன் நேற்று அவரை அங்கு கைது செய்துள்ளது. மெஹுல் சோக்ஸி தனது மனைவி பிரிதி சோக்ஸியுடன் பெல்ஜியத்தின் ஆண்ட்வெர்ப்பில் வசித்து வந்ததாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மெஹுலின் மனைவி பிரீத்தி சோக்ஸி ஒரு பெல்ஜிய குடியுரிமை பெற்றவர்.
'எஃப் ரெசிடென்சி கார்டு' பெற்ற பிறகு சோக்ஸி பெல்ஜியத்தில் வசிக்கத் தொடங்கியதாகக் கூறப்படுகிறது. அவர் பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடி வழக்கில் தேடப்படும் நபராக இருந்து வருகிறார். மெஹுல் சோக்ஸிக்கு நவம்பர் 15ம் தேதி பெல்ஜியத்தில் குடியிருப்பு அனுமதி வழங்கப்பட்டது. மெஹுல் சோக்ஸி ஏப்ரல் 11 ம் தேதி கைது செய்யப்பட்டார். அவர் கைது செய்யப்பட்ட தகவல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!