பரபரப்பு... பாத்திரம் கழுவி கொண்டிருந்த பெண்ணிடம் விசிக நிர்வாகி பாலியல் தொந்தரவு!

 
சங்கையா


 
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள கைலாசப்பட்டி அம்பேத்கர் காலனியில் வசித்து வருபவர் 38 வயது பெண். இவருக்கு  திருமணமாகி இரண்டு ஆண் குழந்தைகள் மற்றும் ஒரு பெண் குழந்தை உள்ளனர்.

மாணவி பாலியல் வழக்கு!! ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி மீது  குண்டர் சட்டம்!!
இந்நிலையில், அந்தப் பெண் நேற்று மாலை தனது வீட்டின் முன் பகுதியில் அமர்ந்து பாத்திரம் கழுவிக் கொண்டிருந்தார். அந்த சமயத்தில் அந்த வழியாக வந்த தென்கரை பேரூராட்சி வி.சி.க துணைச் செயலாளர் சங்கையா அந்தப் பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். 

இதையடுத்து உடனடியாக அந்தப் பெண் கூச்சலிட்டதை தொடர்ந்து வீட்டிற்குள் இருந்த கணவர் ஓடி வந்து அந்தப் பெண்ணை காப்பாற்றினார்.  இதைக் கண்ட அக்கம் பக்கத்தினர் வி.சி.க நிர்வாகி சங்கையாவை பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர். 

சிறுமி பாலியல் வன்கொடுமை!! 15 வயது சிறுவன் பகீர் வாக்குமூலம்!!

தென்கரை காவல்துறையினர் வி.சி.க நிர்வாகி சங்கையா மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். வீட்டிற்கு வெளியே அமர்ந்து பாத்திரம் கழுவிக் கொண்டிருந்த பெண்ணை வி.சி.க. நிர்வாகி பாலியல் துன்புறுத்தல் செய்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

 உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web