பரபரப்பு... 2 வது திருமணம் செய்து கொண்ட மனைவி... சோகம் தாங்காமல் கணவன் தீக்குளிப்பு!

 
தீக்குளிப்பு
மகாராஷ்டிரா மாநிலத்தில்  கோலாப்பூரில் வசித்து வந்த கணவன் மனைவி இடையே கடந்த சில மாதங்களாக தகராறு இருந்து வந்தது. இதனையடுத்து விவாகரத்து பெறாமல் கணவன், மனைவி இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர். விவாகரத்து பெறாமல் வேறொருவரை திருமணம் செய்ததாகக் கூறி, கணவன் போலீஸ் நிலையம் முன்பு தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தீக்குளிப்பு

ஷிவாஜிநகர் காவல் நிலையத்திற்கு வந்த ஷேகர் கெய்க்வாட், மனைவி மற்றும் அவரது குடும்பத்தினர் மீது புகார் அளிக்க வந்ததாக தெரிகிறது  .  எனக்கு  நியாயம் கிடைக்காததால்  ஆத்திரத்தில், காவல் நிலையத்திலிருந்து வெளியேறி  எனது உடலில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து கொண்டேன் என பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். இதைப்பார்த்த காவல்துறையினர் உடனடியாக அவரை மீட்டு ஆம்புலன்சில் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உடலில் 60% தீக்காயங்கள் ஏற்பட்டு இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.  

ஆம்புலன்ஸ்
தற்போது கெய்க்வாட் கோலாப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் சமூகத்தில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

 

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

 உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web