பரபரப்பு... உயர் மின் கோபுர விளக்கு கம்பத்தின் மீது ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த இளைஞர்!

 
குதித்து தற்கொலை
தமிழகத்தில் திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அரசாங்க குப்பம் கிராமத்தில் வசித்து வருபவர்  சுரேந்தர். இவர் சில வருடங்களுக்கு முன்பு மனநல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர். 

இந்நிலையில் இன்று அதே கிராமத்தில் உள்ள 30 அடி உயரம் கொண்ட உயர் மின் கோபுர விளக்கு கம்பத்தின் மீது விறுவிறு என ஏறிவிட்டார்.இதனைக் கண்ட  கிராம மக்கள் கத்தில் கூச்சலிட்டனர். அதனை கண்டு கொள்ளாத சுரேந்தர் கோபுர விளக்கின் உச்சிப்  பகுதிக்கு சென்றுள்ளார். இது குறித்து  கிராம மக்கள் போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.  

பள்ளி மானவி தற்கொலை

விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் அவரை இறக்குவதற்கு முயற்சி செய்தனர். அப்போது தன்னை மீட்க நினைத்தால் இங்கிருந்து கீழே குதித்து விடுவேன் என தற்கொலை மிரட்டல் விடுத்தார்.  இப்பகுதியில் டாக்டர் அம்பேத்கர் சிலை வைக்க வேண்டும் என கூச்சலிட்டார். சிலை வைக்க அனுமதி கொடுத்தால் மட்டுமே தான் கீழே இறங்கி வருவதாக கூறினார். இதனையடுத்து அப்பகுதியில் சிறிது நேரம் பெரும்  பரபரப்பு நிலவியது. 

குளத்தில் மூழ்கி உயிரிழந்த பிள்ளைகள்! விரக்தியால் தற்கொலை செய்து கொண்ட தந்தை!
போலீசார் மற்றும் வருவாய்த் துறையினர்  ஒலிபெருக்கி மூலம் கோரிக்கை பரிசீலிக்கப்படும் என தெரிவித்ததை அடுத்து ராட்சத கிரேன் மூலம் அவரை  கீழே இறக்கினர். அதனை தொடர்ந்து கிராம மக்கள் அனைவருமே இப்பகுதிக்கு அம்பேத்கர் சிலை வைக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தனர். இது  குறித்து மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்து அதன் பேரில் சிலை வைப்பதற்கு அனுமதி அளிக்கப்படும் என தெரிவித்ததை அடுத்து கிராம மக்கள் கலைந்து சென்றனர் .  20 வயது இளைஞர் திடீரென 30 அடி உயர உயர மின் கோபுர கம்பத்தின் மீது ஏறி தற்கொலை மிரட்டல் விடுவித்த சம்பவம்   பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web