ஹாட்ரிக் அவுட்... உலகக் கோப்பையில் இத்தாலிக்கு 'நோ என்ட்ரி'... தலைவர் அதிரடி ராஜினாமா!
உலகக் கோப்பை கால்பந்து திருவிழா என்றாலே இத்தாலி அணியின் ஆட்டம் களைகட்டும். ஆனால், இந்த முறை தகுதிச் சுற்றின் பிளே-ஆப் ஆட்டத்தில் போஸ்னியாவிடம் தோற்று, ரசிகர்கள் தலையில் இடியை இறக்கியுள்ளது இத்தாலி அணி. தொடர்ந்து மூன்றாவது முறையாக உலகக் கோப்பை வாய்ப்பை நழுவவிட்டு, "சாம்பியன்" என்கிற பெருமையைச் சுக்குநூறாக உடைத்துள்ளது. இந்தத் தோல்வி உலகக் கால்பந்து ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர் தோல்விகளால் எழுந்த விமர்சனங்களுக்குப் பதில் சொல்ல முடியாமல், இத்தாலி கால்பந்து சம்மேளனத் தலைவர் கேப்ரியல் கிரவினா தனது பதவியை நேற்று அதிரடியாக ராஜினாமா செய்துள்ளார். "தோல்விக்கு நானே பொறுப்பு" என்று கூறி அவர் விலகினாலும், இத்தாலி கால்பந்தின் எதிர்காலம் என்னவாகப் போகிறது என்கிற கேள்வி எழுந்துள்ளது. 2026 உலகக் கோப்பையிலும் இத்தாலியின் கொடி பறக்காது என்பது அந்நாட்டு ரசிகர்களைப் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

பலமுறை உலகக் கோப்பையை முத்தமிட்ட ஒரு ஜாம்பவான் அணி, இப்படித் தகுதிச் சுற்றிலேயே அடுத்தடுத்து மண்ணைக் கவ்வுவது கால்பந்து உலகில் மிகப்பெரிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. மைதானத்தில் வீரர்கள் காட்டிய சுணக்கமும், சரியான திட்டமிடல் இல்லாததுமே இந்தச் சரிவுக்குக் காரணம் எனப் பலரும் விமர்சித்து வருகின்றனர். இனி வரும் காலங்களிலாவது இத்தாலி அணி மீண்டும் பழைய உத்வேகத்துடன் களம் காணுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
