எளியாரைக் கண்டு இரங்கியிரு என் மகனே... அய்யா வைகுண்டர் வழி நடந்து மனிதம் காப்போம்... ஸ்டாலின் நெகிழ்ச்சி!

 
ஸ்டாலின்

இன்று மார்ச் 4ம் தேதி செவ்வாய்க்கிழமை அய்யா வைகுண்டரின் 193வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டு வருகிறது.இதனையடுத்து தென்காசி திருநெல்வேலி கன்னியாகுமரி தூத்துக்குடி மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 


இந்நிலையில் சமத்துவத்துக்காகப் போராடிய அன்பின் திருவுரு அய்யா வைகுண்டரின்  பிறந்தநாளில் அவர் போதித்துச் சென்றவழி நடந்து மனிதம் காப்போம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது குறித்து  தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவு ஒன்றை  வெளியிட்டுள்ளார். 

அய்யா வைகுண்டர்

அந்தப் பதிவில், ஆதிக்க நெறிகளுக்கும் சாதியக் கொடுமைகளுக்கும் எதிராக வெகுண்டெழுந்து, சமத்துவத்துக்காகப் போராடிய அன்பின் திருவுரு அய்யா வைகுண்டர் அவர்களின் 193ம் பிறந்தநாள்! "எளியாரைக் கண்டு இரங்கியிரு என் மகனே! வலியாரைக் கண்டு மகிழாதே என் மகனே!" என அவர் போதித்துச் சென்றவழி நடந்து மனிதம் காப்போம் என பதிவிட்டுள்ளார்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

 உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web