வங்கி, தபால் அலுவலகங்களில் முதலீடு செய்திருக்கிறீர்களா? நாளை கடைசி தேதி.. இதை மிஸ் பண்ணாம செய்துடுங்க!

 
பணம்

வங்கி, தபால் அலுவலகங்களில் முதலீடு செய்திருக்கிறீர்களா? நாளையுடன் இந்த நிதியாண்டு முடிவடைகிறது. அதனால் நாளைக்குள்  உங்கள் முதலீடு பணத்திற்கு நாமினியாக யாரைப் பரிந்துரை செய்திருக்கிறீர்கள் என்று ஒரு முறை செக் பண்ணிக்கோங்க. ஏப்ரல் 1ம் தேதி முதல் பல விஷயங்களில் அதிரடி மாற்றங்கள் வருகிறது. பரஸ்பர நிதி முதலீடுகளில் முதலீடு செய்துள்ள நபர்கள் நாளை மார்ச் 31க்குள் நாமினி (வாரிசு) நபர் குறித்த விவரங்களை பதிவு செய்ய வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. யாரையும் நாமினியாக பரிந்துரைக்க விரும்பவில்லை என்றால் அதற்கான விவரங்களை தவறாமல் பதிவு செய்ய வேண்டும்.

இந்த நிதியாண்டு முடியும் தருவாயில் இருக்கிறோம். வரும் ஏப்ரல் 1ம் தேதியில் இருந்து பல விஷயங்களில் மாற்றம் வருகிறது. நிறைய பொருட்களின் விலையும் உயர்கிறது. இதையெல்லாம் மனசுல வெச்சுக்கோங்க. உடனடியா ஏப்ரல் 1ம் தேதிக்குள் செய்ய வேண்டிய வேலைகளையும் லிஸ்ட் போட்டு நாளைக்குள்ள முடிச்சிடுங்க..

இந்த ஏப்ரல் முதல் வர்த்தக ரீதியாக பல மாற்றங்களும், புதிய விலை நிர்ணயங்களும் நடைமுறைக்கு கொண்டு வரப்பட உள்ளது. அதன் உத்தேச பட்டியலைப் பார்க்கலாம் வாங்க... ஏப்ரல் 1ம் தேதி முதல் அத்தியாவசிய மருந்து பொருட்களின் விலை 12 சதவீதம் வரையில் உயர்கிறது.

இந்தியாவில் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மாதந்தோறும் நிர்ணயித்து வருகின்றன. சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் மாற்றங்கள் அடிப்படையில் அவற்றின் விலை நிர்ணயம் செய்யப்படுகின்றன. அதன்படி ஏப்ரல் 1ஆம் தேதி எரிவாயு சிலிண்டர் விலையில் மாற்றம் வரலாம்

ஏப்ரல் 1ம் தேதி முதல், வர்த்தக வாகனங்களின் விலையை 2 முதல் 5 சதவீதம் வரை உயர்த்துவது என்று டாடா மோட்டார்ஸ், மாருதி சுஜுகி, ஹோண்டா, ஹீரோ மோட்டோகார்ப் ஆகிய நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன. இது கார் வாங்க திட்டமிட்டுள்ளோருக்கு அதிர்ச்சி தகவல்தான்.

ஏப்ரல்

டோல்கேட் கட்டணம்: தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் சுங்கச்சாவடி கட்டணங்களை உயர்த்தப்போவதாக அறிவித்துள்ளது. அதன்படி வரும் ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் இந்தியா முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளில் தற்போது வசூலிக்கப்பட்டு வரும் கட்டணத்தை விட 5 முதல் 10 விழுக்காடு வரை கட்டணத்தை உயர்த்த முடிவு செய்துள்ளது. கட்டண உயர்வு குறித்து அறிக்கையை நெடுஞ்சாலை அமைச்சகத்திடம் மார்ச் 25ஆம் தேதி தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் சமர்ப்பிக்க உள்ளது.

நாள்தோறும் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் செய்யப்பட்டாலும் கடந்த 312 நாட்களாக பெட்ரோல் டீசல் விலையில் மாற்றம் இல்லாமல் ஒரே விலை நீடிக்கிறது. இந்நிலையில் நிதியாண்டு தொடக்கம் பெட்ரோல், டீசல் விலையிலும் மாற்றத்தை கொண்டு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

2019-20ம் நிதியாண்டுக்கான வருமான வரித்தாக்கல் விவரங்களில் திருத்தங்களை மேற்கொள்ள, திருத்தப்பட்ட படிவத்தை தாக்கல் செய்வதற்கு வரும் 31ம் தேதியே கடைசி நாளாகும். அதன்பின்ன படிவத்தை தாக்கல் செய்ய முடியாது

ஏப்ரல்

குறிப்பிட்ட நிதியாண்டில் ரூ.10 ஆயிரத்துக்கும் அதிகமான வரி செலுத்த வேண்டிய நபர்கள் முன்கூட்டியே குறிப்பிட்ட வரித்தொகையை செலுத்த வேண்டியது அவசியம். அதன்படி 31ம் தேதிவரை முன்கூட்டிய வரியை செலுத்தலாம். அதன் பிறகு வரி செலுத்தினால் அபராதம் விதிக்கப்படும்.

நடப்பு நிதியாண்டு தொடங்கிய பின்பு வேறு நிறுவனத்தில் பணியில் இணைந்திருந்தால் புதிய நிறுவனத்தில் 12பி படிவத்தை தாக்கல் செய்வது கட்டாயம். அந்த படிவம் பழைய நிறுவனத்தில் பெற்ற ஊதியம் தொடர்பான விவரத்தை கொண்டிருக்கும். அதனுடன் சேர்த்து புதிய ஊதியத்துக்கு ஏற்ப வரிப்பிடித்தம் செய்யப்படும். 12பி படிவத்தை புதிய நிறுவனத்துக்கு கொடுக்கவில்லை என்றால் மூல வரிப்பிடித்தம் குறைவாக இருக்கும். ஆனால் வருமான வரிப்படிவம் தாக்கல் செய்கையில் கூடுதல் வரி செலுத்த வேண்டி இருக்கும். மேலும் அபராதமும் செலுத்த வேண்டி இருக்கும்.

பரஸ்பர நிதி முதலீடுகளில் முதலீடு செய்துள்ள நபர்கள் மார்ச் 31க்குள் நாமினி (வாரிசு) நபர் குறித்த விவரங்களை பதிவு செய்ய வேண்டியது கட்டாயம். யாரையும் நாமினியாக பரிந்துரைக்க விரும்பவில்லை எனால் அதற்கான விவரங்களை பதிவு செய்ய வேண்டும்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web