பட்டாசு விபத்தில் பலியானவர்களுக்கு ரூ.10 லட்சம் கொடுக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!

தமிழ்நாட்டில் பட்டாசு ஆலைகளில் வெடிவிபத்துகள் தென்மாவட்டங்களில் அடிக்கடி நிகழ்கின்றன. இந்த விபத்துகளில் பல தொழிலாளர்கள் உயிரிழப்பதும், படுகாயமடைவதும் தொடர்கதையாகி வருகின்றன. இதற்கு முக்கிய காரணங்களாக பாதுகாப்பு விதிமுறைகளை முறையாகப் பின்பற்றாமை, தொழிலாளர்களுக்கு முறையான பயிற்சி இல்லாமை, மற்றும் ஆலை நிர்வாகங்களின் அலட்சியம் ஆகியவை கருதப்படுகின்றன.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன், விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே எட்டக்காபட்டியில் ஒரு பட்டாசு ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 4 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். இதையடுத்து உயிரிழந்த குடும்பத்தினர் தொடர்ந்த வழக்கில் இன்று ஜூன் 20ம் தேதி உயர்நீதிமன்ற மதுரை கிளை, பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்த தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி, பட்டாசு ஆலை விபத்துக்கு உரிமையாளர் காரணமாக இருந்தால் உரிமத்தை ரத்து செய்யவும் உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஆலைகளில் உரிமம், பாதுகாப்பு அலுவலர் நியமனம் உட்பட பல விதிகளை கடுமையாக பின்பற்றுவதை அரசு உறுதி செய்ய வேண்டும். தொடர் ஆய்வு, பாதுகாப்பு பயிற்சி, வெடி பொருள் சட்டம் உட்பட பல விதிகளையும் அரசு முறையாக பின்பற்றவும் உத்தரவிடப்பட்டுள்ளது. விபத்துக்கு ஆலை உரிமையாளர்கள் முழு பொறுப்பு ஏற்க வேண்டும். விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு மறுவாழ்வு திட்டங்களை அமல்படுத்த வேண்டும் என நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!