வனப்பகுதியில் 184 அடி உயர முருகன் சிலை - அனுமதி மறுத்து உயர்நீதிமன்றம் அதிரடி!

 
மருதமலை முருகர் முருகன்

கோவை மாவட்டம் மருதமலை வனப்பகுதியில் பிரம்மாண்ட முருகன் சிலை அமைக்கும் தமிழக இந்து சமய அறநிலையத்துறையின் திட்டத்திற்குச் சென்னை உயர் நீதிமன்றம் சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியிலிருந்து 500 மீட்டர் சுற்றளவுக்குள் எந்தவொரு கட்டுமானத்தையும் அனுமதிக்க முடியாது என நீதிபதிகள் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளனர்.

மருதமலை வனப்பகுதியில் சுமார் ரூ.110 கோடி செலவில், 184 அடி உயரத்திற்கு முருகன் சிலை அமைக்கப்படும் என்று அறநிலையத்துறை அறிவித்திருந்தது. இந்தத் திட்டத்தினால் வனப்பகுதிக்கும், அங்குள்ள வனவிலங்குகளுக்கும் பாதிப்பு ஏற்படும் என விலங்குகள் நல ஆர்வலர் எஸ்.முரளிதரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

மருதமலை

இந்த வழக்கு நீதிபதிகள் என்.சதீஷ்குமார் மற்றும் டி.பரதசக்கரவர்த்தி ஆகியோர் கொண்ட அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், 184 அடி உயர சிலை அமைக்கப்பட்டால், தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் அங்கு வருவார்கள். இதனால் வனவிலங்குகளின் அமைதி பாதிக்கப்படும் மற்றும் சுற்றுச்சூழல் சீர்கேடு அடையும்.

பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியிலிருந்து 500 மீட்டர் சுற்றளவுக்கு அப்பால் மட்டுமே இத்தகைய பெரிய கட்டுமானங்களை மேற்கொள்ள முடியும். 137 மீட்டர் அல்லது 437 மீட்டர் தொலைவில் சிலை அமைப்பது விதிகளுக்குப் புறம்பானது. அறநிலையத்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், "இந்தச் சிலைக்குப் பூஜைகள் நடத்தப்படாது, பக்தர்கள் வலம் வந்து தரிசிக்க மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். தற்போது வனப்பகுதியிலிருந்து 437 மீட்டர் தொலைவில் மாற்று இடம் அடையாளம் காணப்பட்டுள்ளது" என்று விளக்கமளித்தார்.

மருதமலை

அறநிலையத்துறையின் விளக்கத்தை ஏற்க மறுத்த நீதிபதிகள், பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியிலிருந்து குறைந்தது 500 மீட்டர் தொலைவிற்கு அப்பால் புதிய இடத்தை தேர்வு செய்ய வேண்டும் என உத்தரவிட்டனர். 500 மீட்டருக்குள் சிலை அமைக்க ஒருபோதும் அனுமதிக்க முடியாது எனத் தெளிவுபடுத்தினர்.

புதிய இடத்தை தேர்வு செய்து அது குறித்த அறிக்கையைத் தாக்கல் செய்ய அறநிலையத்துறைக்கு உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையை 2 வாரங்களுக்குத் தள்ளிவைத்தனர். இந்த உத்தரவு மருதமலை முருகன் கோயில் வளர்ச்சித் திட்டங்களில் ஒரு புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. வனப்பாதுகாப்பு மற்றும் ஆன்மீகம் ஆகிய இரண்டையும் சமநிலைப்படுத்தும் விதமாக நீதிமன்றத்தின் இந்த அணுகுமுறை பார்க்கப்படுகிறது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!